பக்கம்:புத்த ஞாயிறு.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


56)

கோதையின் காதல்

பார்த்துக் கொண்டிருக்கிரு.ர்கள். ஆனால் அந்தக் கழைக் கூத்திற்கே பெருமையைத் தந்த இரசிகன் ஒருவன் தரை யில் அமர்ந்து சீவிய பனையோலைகளில் எழுத்தாணியால் எதையோ எழுதிக்கொண்டிருக்கிருன். பாட்டும் கூத்தும் முடிகின்றன. கயிற்றை விட்டு அவள் கீழிறங்கி விடு கிருள். பாராட்டுகிற ஆராவாரக் குரல்கள் அங்கே அலைமோதுகின்றன.

முதுமகன்: போ மகளே! போய்ப் பாளையத்துச் சிற்றரசர்

களை வரிசையாக வணங்கிப் பரிசு கேள் மகளே! போ.... (அவள் அந்தச் சுந்தர இளைஞனை மட்டும் கடைக் கண்ணு ல் பார்த்தபடி தயங்கி நிற்கிருள். எல்லோரும், அந்தக் கழைக்கூத்தி, பாளையத்து அரசர்களிடம் என்ன பரிசு பெறப்போகிருள் என்பதை அறிய ஆவ லுடன் காத்திருக்கிரு.ர்கள். அந்த வாலிபன், சற்றும் எதிர்பாராமல் எழுந்து வந்து அவள் முன் நிற்கிருன்..}

வாலிபன்: இந்தா! உன்னுடைய ஆட்டத்துக்கு இதைவிட

மெய்யான பரிசு வேறு ஒன்றும் இருக்க முடியாது... பெற்றுக்கொள். (ஒர் ஒலை நறுக்கை அவள் பக்கம் வந்து கைகளில் விழுமாறு வீசிவிட்டு மின்னலைப்போல் கூட்டத்துக்குள் போய் அவன் மறைந்துவிடுகிருன்.)

கோதை: (நறுக்கைவாங்கி வாய்விட்டுப் படிக்கிருள்)

‘சீத மதிமுகமும் சீர்முத்துப் புன்னகையும் காதுவரை நீள் கயல்விழியும்-கோவை கழையாடக் கண்டாடும் கற்பனைகள் எல்லாம் இழையோடி ஏங்கிடுமென் நெஞ்சு' - - Iதங்களை முந்திக்கொண்டு பரிசளித்த அந்தக்காளை யார் என்று மீசை துடிக்கக் கனல் கக்கும் விழிகளுடன்

பார்க்கிருர்கள் எட்டுப்பாளையத்துச் சிற்றரசர்கள்]

கோதை: (மறுபடியும் ஒலநறுக்கைப் படிக்கிருள்...)

'சீத மதி முகமும்......நெஞ்சு’