பக்கம்:புத்த ஞாயிறு.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 55

பிரம்பு, காதுகளில் வைரக் கடுக்கன், கைகளில் மோதிரம் என்று கலைஞர்கள் விதம் விதமாக இருக் கிருர்கள். இந்தவிதமான ஆடம்பரங்கள் எதுவும் இல்லாமல், வலது கையில் சின்னஞ்சிறு அகல் விளக் கொன்றை மட்டும் ஏற்றி எடுத்துக் கொண்டு கவனத் தோடு நடந்து அரங்குக்கு வருகிருன் கோதைக்குப் பழக்கமான அந்த இளம் கவி மணவாளன்) ஒரு சிற்றரசர் : வா அப்பா! வா, உன் சங்கீதத்தை விளக் கேற்றி வைத்துக் கொண்டுதான் கேட்கவேண்டு மென்று நீயே முன்னேற்பாடாகத் தீபம் கொண்டு வந்து விட்டாயோ? மணவாளன் இதையெல்லாம் அலட்சியப்படுத்துகிறவ ஞய் அரங்கேறுகிருன். கோதை கண்ணிமையாமல் பெருமை பொங்க அவனையே பார்த்துக் கொண்டிருக் கிருள். அதுவரை பாதுகாப்பாக அணையாமல் தீபத்தைக் கொண்டுவந்தவன், இடதுகை அணைப்பை விலக்கிக் கொண்டு தீபத்தை வலதுகையால் மேலே உயர்த்திப் பிடித்தான். நாற்புறக் காற்றும் பாய்ந்துவர தீபம் படபடக்கிறது. தீபம் அணைந்துவிடப்போகிற நேரத்தில் மணவாளனின் நாவிலிருந்து ஒர் இராகம் ஒலிக்கத் தொடங்குகிறது. அத்தனை காற்றுக்கும் நடுவே தீபம் மறுபடியும் குதித்துக் கொழுந்து விட்டுப் பொங்கி எரிகிறது. அரை நாழிகைக்கும் மேல் இந்த அற்புத சாகசம் தொடர்கிறது. அவையின் முன்புறமாக அமர்ந் திருந்த வயது முதிர்ந்த ஒர் இசைக் கலைஞர் கோபத் தோடு உடம்பே ஆடும்படிஎழுந்து நின்று கொள்கிரு.ர். அவர் : தம்பி! இதை நாங்கள் ஒப்புக் கொள்ளவே முடியாது. இது சங்கீதமில்லை. மாந்திரீகத்தையும், வசியத்தையும் கலந்து சங்கீதம்போல் வித்தை காட்டிப் பாமரர்களை ஏமாற்றக் கூடாது... . மணவாளன் : ஐயா இது தீபவர்த்தினி என்று ஓர் இராகம் என் பாட்டனர் இந்த அபூர்வ ராகத்தை எனக்குச்