பக்கம்:புத்த ஞாயிறு.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தா. பார்த்தசாரதி 57

உடல்தான் பெண்ணே! எந்த நினைப்பினலும் நீ உருகி இளேக்கக் கூடாது. உடம்பை அப்படியே பூச்சரமாய் வளைத்த வளைவுக்கு வருகிருற்போல, மின்ன மின்ன வைத்துக் கொள்ள வேண்டும். புரிந்து கொள்!

காட்சி-3

|கோதை எதிர்பார்த்தவாறு மணவாளன் அன்று இரவு இன்னிசை திருவிழா முடிந்து சத்திரத்துக்குத் திரும்பி வரவில்லை. பெரியவர் உறங்கிய பின்பு பூனைபோல மெல்ல எழுந்து அந்த மகிழ மரத்தடியில் போய்க் கோதை அவனுக்காகக் காத்திருக்கிருள்) கோதை: (தனக்குள்) எந்த ஆண்பிள்ளையின் மேலும் என் மனம் ஈடுபடுவது அப்பாவுக்கு நிச்சயமாகப் பிடிக்காதுதான். அப்படிப்பட்டதொரு நோக்கத்தோடு கழைக்கூத்துக்காக மட்டும் தானே என்னை வ வார்த் திருக்கிருர் ஆளுல்... நேற்று இவரைப் பார்த்தது. முதல் நானும், என் உடலும், அதன் அழகுகளும் இவருக்காகவே வளர்க்கப்பட்டோம் என்றல்லவா ஏங்குவதாகத் தோன்றுகிறது... (முன்தினம் அவனிடமிருந்து பரிசாகத் தனக்குக் கிடைத்த அந்தப் பாடலே எடுத்துப் படித்து மறுபடியும் அந்தப் பெருமிதத்தில் சிறிது நேரம் திளேக்கிருள்... இன்னும் மணவாளன் வருவதாகக் காணுேம். பொறுமையிழந்தவளாய்ச் சத்திரத்து மணியக்கார ரிடம் போய் விசாரிக்கிருள்) கோதை, ஐயா...! உங்களுக்கு ஏதாவது தகவல் தெரி யுமா? அந்தப் பாட்டுக்கார இளைஞர் இங்கே தங்கி, பிருப்பதாய்ச் சொன்னரே... அவர் வந்துவிட்டாரா? மணியக்காரர். யாரு? மணவாளத் தம்பியா? நாச்சியார் புரத்து அரண்மனையிலிருந்து அலங்காரப் பல்லக்குக் - கொணர்ந்து அரசமரியாதையோடு அவரை அழைத்

பு-4