பக்கம்:புத்த ஞாயிறு.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4

வாழ்க்கை என்றும்-வாழ்க்கையிலிருந்து பிறந்த கலை என்றும் இரு பிரிவு ஏற்பட்டது.

உணர்ச்சிகளோடு போராடுவது வாழ்க்கை. உணர்ச்சி களோடு விளையாடுவது கலை. வாழ்க்கைக்குப் பயன் வாழ் வது. கலைக்குப் பயன் அநுபவிப்பது. கலை என்பது நாடக வழக்கு. வாழ்க்கை என்பது உலகியல் வழக்கு. வாழ்க்கை யில் துன்பங்களே அதிகம். கலையிலோ துன்பத்தை நடித் தாலும், பார்த்தாலும் அதனல் கிடைப்பது இன்பமே. ஆரம்பக் காலத்தில் பாடல் ஒன்றைப் பாடி அப்பாடற் பொருளுக்கேற்ப அரங்கில் அவிநயம் காட்டும் அளவில் அமைந்திருந்தது கூத்துக்கலை. பின் அக்கூத்துடன் இயற் றமிழாகிய உரையாடலும், கலந்தவிடத்து அதற்காக நெடு நேரம், நடித்துக்கொண்டு செல்வதற்கேற்பப் புனேயப் பட்ட வாழ்வு ஒன்று நாடகக் கதையாகத் தேவைப்பட்டது. ஆடலும், அவிநயமும், பாடலும் கலந்து கூத்துமாத்திரை யாய் நின்ற கலை விதவிதமான உணர்ச்சிகள் பெற்ற கதா பாத்திரங்களைக் கொண்டு பேச்சினும், மெய்ப்பாட்டினும், பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து வளர்ந்து விழுமிய நாடகக் கலையாயிற்று. ஆதியில் தமிழின் கண் கூத்தெனக் கூறப்படும் ஆடல் பாடல், அவிநயம், எவ்வாறு இருந்திருக் கலா மென்று நினைத்துப் பார்க்கும்போது இன்று கேரளத் தில் ஆடப்படும் கதகளிக் கூத்துடன் ஒரு புடையொப்புமை உடையதாக இருந்திருத்தல் வேண்டுமெனத் தெரிகிறது. பண்டைத் தமிழ் நூல்களிற் கூறப்படும் கொடு கொட்டிக் கூத்து', 'சாக்கைக் கூத்து’ என்பனவும் இவ்வாறே அமைந் திருத்தல் வேண்டும். கூத்து என்ற நிலையிலிருந்து வளர்ந்து அரங்க நிகழ்ச்சிக்கு நாடகம் என்ற பெயர் வந்ததும் அதன் தன்மை புதுமை பெற்றது. அவ்வாறு புதுமை பெற்ற பின்னும் பழைய வடிவங்களான குறவஞ்சிக் கூத்து, தோற் பாவைக் கூத்து, கழைக்கூத்து, தெருக்கூத்து முதலிய கூத்துக் கள் இன்றளவும் திருவிழாக் காலங்களிலும், பிற இடங்களி

லும், நடித்துக்காட்டப்படுவதைக் காண்கிருேம்.