பக்கம்:புத்த ஞாயிறு.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


58 கோதையின் காதல்

துப்போளுர்க்ளே?... இளையராணி முத்து நாச்சியார் மீது அரசருக்கு அளவு கடந்த பிரேமை. அந்த முத்து நாச்சியாரின் மகளான பாளையத்து இளவரசி மோகன வல்லிக்கு இவரைக் கொண்டு சங்கீதம் கற்றுத்தர ஏற்பாடு நடக்கும் போலிருக்கிறது... கோதை: (திகைப்படைந்தவளாய்)... அதற்காக...? மணியக்காரர்: இளையராணி பிடிவாதம் பிடித்தாளாம்... 'இப்போதே அந்த மணவாளன அழைத்துக்கொண்டு வந்து ஏற்பாடு செய்தால்தான் ஆயிற்று’ என்று... அரசர் என்ன செய்வார்? உடனே அழைத்துவரச் சொல்லிப் பல்லக்குடன் இவரைத்தேடி ஆட்களை அனுப்பிவிட்டார். இளையராணிகள் ஆசைப்பட்டு, அதற்குச் செவிசாய்க்காத பாளையத்து அரசர்கள் எந்தக்காலத்திலாவது எந்தக் கதையிலாவது உண்டா அம்மா? . (முகம் தெரியாத அந்த மோகன வல்லியின்மீது கோதைக்குத் தாங்கமுடியாத பெருஞ்சினம் எதற் காகவோ மூள்கிறது. வெளிக்காட்டாமல் திரும்பி நடக்கிருள். கோபத்தோடு அந்தப்பாடலின் பின் மூன்று வரிகளையும் மெல்லத் தனக்குள் சொல்லிப் பார்க்கிருள்.) - - - கோதை: "காது வரை நீள் விழியும்-கோதை

கழையாடக் கண்டாடும் கற்பனைகள் எல்லாம் இழையோடி ஏங்கிடும் என் நெஞ்...சு" இப்படிப் பாட்டில் எனக்காக ஏங்கும் நெஞ்சு மெய் யாகவே எனக்காக ஏங்குமானல் நான் ஒருத்தி இந்த மகிழ மரத்தடியில் இப்படி வந்து காத்திருப்பேன் என்பதை மறந்து எப்படி அவர் அரண்மனைப் பல்லக்கில் ஏறிக்கொண்டு போனர்? (நெட்டு யிர்க்கிருள்) [எதிரே கோதையைத் தேடிக்கொண்டு வந்த அவளு &l-ti! தந்தை வழிமறிப்பதுபோல் திடுமென அவளெதிரே வந்து நிற்கிரு.ர்.1 . -