பக்கம்:புத்த ஞாயிறு.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 59

பெரியவர்: (கண்களிலும் முகத்திலும் குரலிலும் கடும் சீற்றம் தெரிய) உன் போக்குச் சிறிதும் நன்ருயில்லை மகளே! நான் உறங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு தானே நீ இங்கு இப்படித்தனியே எழுந்திருந்து வந்தாய்?

கோதை: (மெளனமாகித் தலைகுனிந்தவாறு) அதெல்லாம்

இல்லையப்பா... வந்து...வந்து...? -

பெரியவர்: வந்தாவது? போயாவது? போதும் அம்மா! நாலு வயதுக் குழந்தையாக உன்தாய் உன்னை விட்டுப் போன நாளிலிருந்து ஓர் அபூர்வமான மூலிகைச் செடியை மிகவும் பாதுகாப்பாய்ப் போற்றிப் பேணி வளர்ப்பதைப்போல் உன்னேயும் உன் உடம்பையும் வளர்த்தது இந்தக் கழைக் கூத்துக் கலைக்காகவே என்பதை நீ மறந்துவிடக் கூடாது பெண்னே! ஏனைய பெண்களைப்போல் உலகரீதியான நினைவுகளை உன் மனம் ஒருகாலும் தழுவக் கூடாது கோதை!

|கோதை மறுமொழி ஏதும் பேசமுடியாமல் நடக்கிருள். அவள் சத்திரத்தை அடைந்து தனிமையில் உறங்காமல் தவிக்கிருள்... அதே நேரத்தில் அரண்மனைத் தனியறை ஒன்றில் தனியணுக உறக்கமின்றித் தவிக்கிருன் மண வாளன்! . .

காட்சி மாற்றம்

மணவாளன்: (தனக்குள்) யாருக்கு வேண்டும் இந்த அரண் மனைச் சுகபோகங்களெல்லாம் நிறைந்த அசெளகரியங் களோடு இருந்தாலும் மேலே ஆகாயம் கீழே பூமி என்று திரிகிறபோதுதான் மன்ம்'எவ்வளவு சுதந்திர மாகவும் உல்லாசமாகவும் இருக்கிறது! செளகரியமான சூழ்நிலைகளில் தேவைக்கு அதிகமான உபசாரங்களுக்கு இடையே அகப்பட்டுக் கொள்ளும்போது அவற்றி லிருந்து உடனே விடுபட்டுப் பற்க்கத்தானே நம் மனம் துடிக்கிறது: . . . . . .