பக்கம்:புத்த ஞாயிறு.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


60 கோதையின் காதல்

காட்சி-4

(நாச்சியார் புரம் அரண்மனையில் மறுநாள் பொழுது விடிகிறது. மனத்திற்குச் சிறிதும் விருப்பமில்லாத புதுப்புது அநுபவங்கள் மணவாளனே வெறுப்படைய வைக்கின்றன. அரச கம்பீரமான ஆடம்பர அலங்: காரங்களோடு, தோழி ஒருத்தி வீணையைக் கைகளால் ஏந்திவர அங்கு அவன் முன் வருகிருள் பாளையத்து இளவரசி) - -

மணவாளன்: (தனக்குள்) இவளுக்கு மோகனவல்லி என்ப தற்கு பதில் அலங்காரவல்லி என்றே பெயரிட்டிருக்க வாம்! இவள் என்னிடம் சங்கீதம் கற்றுக்கொள்ள வருகிருளா, இல்லை தன் அலங்காரங்களால் என்னை மருட்டவருகிருளா?

("நான் அழகாக இருக்கிறேன்’ என்பதை ஒவ்வோர் கணமும் நிரூபிக்க விரும்புகிறவளாக நடந்து வருகிருள் இளவரசி. குரு வணக்கம் கூடச் செய்யாமல் மணவாள னுக்கு முன்னல் வந்து மிடுக்காக அமர்ந்து கொள் கிருள். பணிவோ, விநயமோ சிறிதளவும் இல்லாத. இவளிடம் இசை அறிவாவது இருக்கிறதா என்பதைச் சோதிக்க விரும்பிக் கேள்விகள் சிலவற்றைக் கேட் கிருன் மணவாளன்)

மணவாளன் : இளவரசி சில கேள்விகள்...காந்தருவம், கீதம், பாணி, காமரம்...இந்தப் பெயர் வகைகள் எதையெதைக் குறிக்கும் என்று தெரியுமா?

மோகனவல்லி : ......தெரியாது.........

மணவாளன் : குறிஞ்சியில் தோன்றிய കൊ பண்ணைப் பாடினல் அது எந்த இராகத்துக்குச் சமமாக இருக்கும்? -

மோகனவல்லி : ......தெரியாது.........