பக்கம்:புத்த ஞாயிறு.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்த சாரதி 61

மணவாளன் : நைவளம், காந்தாரம், படுமலை, மருள் அயிர்ப்பு, பஞ்சுரம், மெய் ஆற்றுச் செந்திறம் இவை எந்த யாழ்த்திறத்தின் பெயர்கள்? மோகனவல்லி : ......தெரியாது......... மணவாளன் : பின்பு உங்களுக்கு என்னதான் தெரியும்? மோகனவல்லி : இப்போது உங்களிடம் கற்றுக்கொள்ள

வந்திருக்கிறேன் என்பதுமட்டும் தெரியும்... மணவாளன் : அது எனக்கும் தெரியும். ஆல்ை அடிப்படை இசை அறிவுகூட இல்லாதவர்களுக்கு நான் எதைக் கற்பிக்க முடியும்? மலையுச்சியில் நின்று கொண்டிருக் கிறவனிடமிருந்து அகல பாதாளப் பள்ளத்தில் கீழே நிற்கிறவர்கள் எதையாவது கைநீட்டிப் பெற முடியுமா? பெறுவதற்குத்தான் ஏதாவது எட்டுமா? இதைக் கேட்டுப் பாளையத்து இளவரசி மோகனவல்லி கோபத்தோடு உதடுகளே மடக்கிக் கடித்துக் கொள் வது போல் வெறுப்புக்காட்டி முகம் சுளித்தாள். அவளது சிவந்த முகமே சினத்தினுல் மேலும் சிவந்தது.1

மோகனவல்லி : ஊர் பேர் தெரியாமல் முன்பின் பார்த் - திராத நாடோடிக் கழைக்கூத்தியைப் புகழ்ந்து கவி பாடுவீர்கள் நீங்கள்! அப்படிப் பாடுவதற்குப் பாத்திர மாகிற ஞானசூன்யங்களெல்லாம் உங்களைக் கவர முடியும். நாங்கள் கவர முடியாது. அப்படித்தானே? மணவாளன் : அது என் விருப்பம்! இதைப்பாடு என்று மனம் தானகவே பொங்கி மேலெழுந்தாலொழிய நான் எதையும் யாரையும் எதற்காகவும் மதித்துப் பாடுவ தில்லை. நீங்களும் ஊர் பேர் தெரியாத கழைக்கூத்தி யாய்ப் பிறந்து அதேவிதமான அழகுடன் தோன்றினால் உங்களையும் பாடியிருப்பேனே என்னவோ? மோகனவல்வி : உங்கள் பதிலின் இகழ்ச்சியும் அலட்சிய மும் எனக்குப் புரிகிறது...போகட்டும்...என்னல் முடிந்