பக்கம்:புத்த ஞாயிறு.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


62

கோதையின் காதல்

ததைப் பார்க்கிறேன்... (சினத்தோடு புறப்படுகிருள் இளவரசி) (மணவாளன் திரும்பி நடக்கிருன். பத்துப் பதினைந்து நாட்கள் சென்று அந்த அரண்மனையாகிய சுகபோகச் சிறையைவிட்டு வெளியேற முடிவு செய்கிருன். ஒரு. நாள் சாயங்காலம், மலையடிவாரத்தில் உலாவப் போவதாய்ச் சொல்லிவிட்டுப் புறப்பட்டு அரண்மனையி: லிருந்து வெளியேறி வந்த மணவாளன் மீண்டும் அந்த அரண்மனைக்குத் திரும்பவே இல்லை.)

காட்சி-5

(மலையடிவாரத்துச் சாலையில் உலாவிக் கொண் டிருக்கிருன் மணவாளன்!

மணவாளன் : (தனக்குள்) இந்தப் பதினைந்து இருபது:

நாட்களாய் எப்படிக் கோதையைப் பார்க்காமல் இருந்தோம்? நாச்சியார் புரத்து வேனில் விழாக்கூட

முடிந்து விட்டதே! கோதையும் அவள் தந்தையும்,

ஊருக்குத் திரும்பியிருக்கலாமோ என்னவோ? எதற்கும் சத்திரத்தில் போய்க் கேட்டுப் பார்க்கலாம்...

(விரைவாகச் சத்திரத்தை நோக்கி நடக்கிருன்.

கோதையைப் பற்றிய நினைவுகள் அவனுள் பாடலாய்:

எழுகின்றன. நீலாம்பரி ராகமும் சுகமான அனுபவமு. மாய் அவன் நடக்கும்போது மலையடிவாரத்து மூங்கில் காட்டிலிருந்து ஒர் இனிய அழுகுரல் கேட்கிறது. நீலாம்பரி நின்றுபோகிறது.) .

மணவாளன் : யார் அது? யாருடைய குரல்?

(ஒடிப் போய்ப் பார்க்கும்போது கோதை தலைவிரி கோலமாக அங்கே நின்று கொண்டு புலம்பிக் கொண் டிருக்கிருள். சில பச்சை மூங்கில்கள் வெட்டிக் குவிக்கப்

பட்டிருக்கின்றன. மூங்கில் புதர் அருகே கோதையின்

தந்தையான அந்தப் பெரியவர் நிலைகுலைந்து கீழே: