பக்கம்:புத்த ஞாயிறு.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 63

விழுந்து கிடக்கிருர், அவருடைய கையிலிருந்து நழுவிய வெட்டரிவாள் ஒருபுறம் கிடக்கிறது. மணவாளனைப் பார்த்ததுமே கோதை கதறி அழுகிருள்)

கோதை : இந்த உலகத்தில் இனிமேல் நான் அநாதை. கழைக்கூத்துக்கு ஏற்ருற்போல் நல்ல மூங்கில்கள் இங்கே கிடைக்கும் என்ருர்கள். காட்டுக்குள் நுழைந்து மூங்கில் வெட்டவந்து மூச்சையே விட்டு விட்டார் என் தந்தை. மூங்கில் புதரில் இருந்த பாம்புப் புற்றைக் கவனிக்காமல் புற்றின் மேலேயே காலை வைத்து ஏறி விட்டார். ஐயோ! இப்படி இங்கே உயிரைப் பறி கொடுக்கவா நாச்சியார் புரத்து வேனில் விழாவுக்கு என்னை ஆவலோடு அழைத்து வந்தார்? விழா முடிந்த தும் இங்கிருந்து புறப்பட்டிருந்தாலும் நல்லதாகி இருக்குமே! ஏன் தான் இங்கே சில நாட்கள் தொடர்ந்து தங்கி நல்ல மூங்கில்கள் வெட்டிக்கொண்டு போக வேண்டுமென்ற பேராசை அப்பாவுக்கு வந்ததோ? (மேலே பேச முடியாமல் குமுறிக் குமுறி அழுகிருள். கோதையைத் தேற்ற முயல்கிருன் மணவாளன்) , so

மணவாளன் : அழாதே கோதை நடுக்காட்டில் மூங்கில் வெட்டிக் கொண்டுபோக வந்த இடத்தில் உன் தந்தைக்கு எமன் காத்துக் கொண்டிருப்பான் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும். கவலைப்படாதே பெண்ணே! உலகத்தில் யாருமே அநாதை இல்லை... அரண்மனையில் அடைபட்டுக் கிடந்த நான் இன்றைக்கு இந்த மலையடிவாரத்துச் சாலையில் உலாவப் புறப் பட்டதே இப்படி ஓர் அநாதைக்கு உதவவேண்டு மென்ற தெய்வ சித்தத்தினுல்தான் போலிருக்கிறது. உலாவிவிட்டுத் திரும்பும்போது சத்திரத்தில் உன்னை விசாரிக்கவேண்டுமென்று எண்ணித்தான் இந்தப்பக்கம் நடந்தேன்...சிரித்த முகமும் இனிய பேச்சுமாக 'உன்னைச் சந்திக்க விரும்பினேன். அந்தச் சந்திப்பு