பக்கம்:புத்த ஞாயிறு.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 65

Iமூங்கிற் காட்டிலிருந்து நாச்சியார் புரத்து மயானம் வரை முதியவரின் உடலைச் சுமந்துகொண்டு வந்து இறுதிக்கடன்களை நிறைவேற்றுகிருன் மணவாளன், உடன் வந்த கோதை அழுது முகம் வீங்கி வாடித் துவண்டுபோய் விடுகிருள். நள்ளிரவில் மயானத் தனி மையை விட்டு இருவரும் வெளியேறுகிரு.ர்கள். நாச்சியார் புரத்து வீதிகளில் பாதி இரவின் அமைதியில் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது கோதை நடக்க முடியாமல் மிகவும் சோர்ந்து தடுமாறுகிருள். அவளுடைய கையை ஆதரவாகப் பற்றித் தாங்கிக் கொண்டு சத்திரத்தைநோக்கி நடக்கிருன் மணவாளன்)

மணவாளன் : கோதை! இந்த உலகத்தில் நீயும் ஒர் அநாதை, நானும் ஓர் அநாதை. நீயும் ஒரு கலையில் தேர்ந்தவள், நானும் ஒரு கலையில் தேர்ந்தவன். இரண்டுபேரும் தனித்தனியாய்த் தவிப்புக்களை உணர்ந் தவரை அநாதைகள்தான். ஆல்ை இனிமேல் அப்படி யில்லையே! இரண்டுபேரும் ஒன்ருக நடக்கிருேம். ஒரே வழியில் நடக்கிருேம். ஒன்முக உணர் கிருேம். ஒன்ருகத் தவிக்கிருேம்! ஆகவே இந்த விநாடியிலிருந்து இரண்டு பேருமே அநாதைகள் இல்லை கோதை பாளையத்து இளவரசி மோகனவல்லிக்குச் சங்கீதம் கற்பிக்கச் சொல்லி என்னை அரண்மனைக்கு அழைத்துக்கொண்டு போனர்கள். அந்த அரண்மனையிலிருந்து விடுபட்டு ஒடி வரவும், உன்னைக் காணவும் நான் தவித்த தவிப்பைச் சொல்லி முடியாது. இன்று இதோ வந்துவிட்டேன். இனிமேல் மறுபடி அரண்மனை வாயிற்படிகளில் ஏறுகிற நோக்கமில்லை. பாளையத்து இளவரசிக்கு இசை கற்பிப் பதைவிட உனக்கு அதைக் கற்பித்து உன்னை அங்கீகரித் துக் கொள்ளவே நான் விரும்புகிறேன். நீ என்னுடை யவள் என்னுடைய குடும்பச் சொத்துக்களாகிய அபூர்வ ராகங்களைக் கற்றுக்கொள்ள தீயே பாத்திர Ꮬ Dür ©Ꮌf éll ❍Ꭲ, , .