பக்கம்:புத்த ஞாயிறு.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


గ్ర$ கோதையின் காதல்

காட்டியது. மறுநாள் பொழுது விடிவதற்கு முன்னரே பாளையத்து அரண்மனையிலிருந்து கொலை மறவர்கள், மாடுமாடாய் வளர்ந்திருந்த பத்துப் பன்னிரண்டுபேர் மண்வாளனைத் தேடிச் சத்திரத்துக்கு வந்தார்கள். மிரட்டினர்கள்.1

கொலைமறவன் ஒருவன்: (கையில் ஒர் ஒலையைக் கொடுத்து) இந்தா இதைப் படித்துப் பார். மறுபடியும் மரியாதை யாக அரண்மனைக்கு வந்த எங்கள் பாளையத்து இளவரசி மோகனவல்லிக்குச் சங்கீதம் கற்பிக்கச் சம்மதமா? அல்லது இந்தக் கழைக் கூத்தியோடு சேர்ந்து இருக்கத் தான் விரும்புகிருயா? நீ இந்தக் கழைக் கூத்தியோடு சுற்றிக்கொண்டு திரிவதைத் தான் விரும்புவாயானல், உயிருள்ளவரை நீ இந்த நாச்சியார்புரம் பாளையத்தின் ஊரெல்லைக்குள் எங்குமே நுழையக் கூடாது. மீறி நுழைந்தால் உன் தலையைத் துண்டு துண்டாக்கி விடுவோம்.

மணவாளன் : (ஒலையைப் படித்துவிட்டு அலட்சியமாய்ச் சிரித்துக்கொண்டே கிழித்துக் காற்றில் பறக்க விடுகிருன்) மிரட்ட வேண்டாம்! போய் உங்கள் பாளையத்து மன்னரிடமும் இளையராணியிடமும் இதைச் சொல்லுங்கள். பாளையத்து அரண்மனையின் அதிகாரத் தையும் அந்த அதிகாரம் எழுதப்பட்டிருந்த ஒலேயையும் கிழித்துக் காற்றில் பறக்கவிட்டு விட்டான் மணவாளன் என்று போய்ச் சொல்லுங்கள். என்னைப் போன்ற சிங்கங்கள் காட்டில்தான் வாழவேண்டும். நாட்டில் வாழ முடியாது. வாழவும் விடமாட்டார்கள். தெரிந் ததுதானே? இந்த உத்திரவிலும் பயமுறுத்தலிலும் புதுமை என்ன இருக்கிறது? அந்தக் கொலமறவர்கள் மருண்டு நிற்கிருர்கள். அதே விடிையில், மணவாளன் கோதையின் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு சத்திரத்தைவிட்டு வெளியேறு