பக்கம்:புத்த ஞாயிறு.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 69."

கிருன். பின்னர் ஊர் எல்லையைவிட்டும், பாளையத்தின் எல்லையை விட்டும் வெளியேறி ஒரு மலையடிவாரத்தை அடைகிருர்கள் அவர்கள்.) -

கோதை : கண்ணு! எனக்காக நீங்கள் உங்களுடைய

செளகரியங்களை எவ்வளவோ விட்டுக் கொடுத்து

விட்டீர்கள். நான் அவ்வளவிற்குத் தகுதியானவளா? (இதைக் கூறுகையில் அவள் நா தழுதழுக்கிறது.)

மணவாளன் : கோதை! நீயும் நானும் இதற்கு முன் எந்தப் பிறவியிலுமே மண்ணை மிதித்து நடந்ததில்லை. பூக்களே மிதித்து அவற்றின் மென்மைகூட உறுத்தி விடுமோ என்று கூசிக் கூசி நடந்திருக்கிருேம். இப்போது இந்தக் கரடுமுரடான மண்ணில் நடப்பது எவ்வளவோ வேதனையாகத்தான் இருக்கிறது. கவலைப்படாதே! நீ என்னுடைய அபூர்வ ராகங்களுக்கு எல்லாம் இங்கித மான நாத நிலையம். உன்னை நான் ஒருபோதும் கைவிட. மாட்டேன். பாளையத்து அதிகாரமும், மனிதர்களின் பொருமையும்,மண்ணுலகத்து அழுக்குக்களும் நாட்டில் நம்மை வாழவிடப்போவதில்லை. ஆலுைம் நாம் சேர்ந்து வாழத்தான் வேண்டும். காட்டிலும் மலையிலும் சேர்ந்து வாழ்வோம். மனிதர்களின் மூச்சுக் கலவாத தூய மலேக் காற்றில் உலாவுவோம். மனிதர்களின் கைபடாத சுனேத் தண்ணிரைக் குடிப்போம். மூங்கில் அரிசியையும் காட்டுக் கிழங்குகளையும் வேக வைத்து உண்போம். நாட்டு மனிதர்களின் நாகரிகமற்ற பொருமையைஎள்ளி நகையாடிக்கொண்டே காட்டில் வாழ்வோம்...வா... இந்த அன்பு சத்தியமானது பெண்ணே...வா. -

(அவளுடைய வலது கையில் தன்னுடைய வலது. கையைப் பொருத்தி அவள் முகத்தைப் பார்க்கிருன் மணவாளன். அவ்வாறே உணர்ச்சி பொங்கக் கோதை. யும் கைப்பற்றியபடி அவனைப் பார்க்கிருள்.)