பக்கம்:புத்த ஞாயிறு.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


72 கோதையின் காதல்

குடிசை. மோகனவல்லி அங்கு போகிருள். அவர்ை. சற்றும் எதிர்பார்க்காதவகை மூங்கிலில் புதிதாகச் செய்த புல்லாங்குழலுக்குத் துளையிட்டுக்கொண்டு. மணவாளன் குடிசை வாசலில் அமர்ந்திருக்கிருன். சற்றுத்தள்ளிச் சுனைப்பிளவில் கோதை நீராடிக்கொண். டிருக்கிருள். -

தன்னருகே ஆட்களுடன் மோகனவல்லி வருவது கண்டு. நிமிர்ந்து பார்த்த மணவாளன், அவளுடைய ஆணவ. ஆதிகாரங்களை அலட்சியம் செய்கிற மாதிரி முகத்தைத் திருப்பிக் கொண்டு வேறுபக்கமாகப் பார்க்கிருன். மோகனவல்லிக்கு அவனுடைய அலட்சியம் சினமூட்டு கிறது, வேதனையளிக்கிறது) - மோகனவல்லி: நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிருேம்.

உங்களிடம் சங்கீதம் கற்றுக் கைவிடப்பட்ட மோகன வல்லி வேறு. இப்போது நீங்கள் சந்திக்கிற இந்த மோகனவல்லி வேறு... மணவாளன்: யாராயிருந்தால் எனக்கென்ன?

மோகனவல்லி: மரியாதையாக நடந்துகொள்ளத் தெரிய, வேண்டும். இப்போது உங்கள் எதிரே வந்து நிற்கிற, மோகனவல்லி இந்த நாச்சியார்புரம் பாளையத்தை ஆள்கிற இளவரசி. அவளெதிரே இவ்வளவு அலட்சிய மாக நீங்கள் உட்கார்ந்திருத்தலாகாது.

மணவாளன்: அப்படியா? இளவரசி, மரியாதை என்பது முதலில் உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டுமே? டாளே யத்து இளவரசி தன் எல்லைக்கு அப்பால் காடுதேடி வந்து இப்படி மரியாதையை எதிர்பார்க்க முடியாது...

மோகன வல்லி : இருக்கலாம்! ஆனால் நீங்கள் என்னிட மிருந்து எதிர்பார்த்தே ஆகவேண்டிய பெரும் பயன் ஒன்றுண்டு, கவிஞரே! நீங்களும் உங்களுடைய அபூர்வ மான கலைநுணுக்கங்களும் பரம்பரை இல்லாமல் இந்தக்