பக்கம்:புத்த ஞாயிறு.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தா. பார்த்தசாரதி 77

மணவாளன் : சீக்கிரம் வந்துவிடு! நானும் சற்று நேரம்

மூங்கில் காட்டில் உலாவிவிட்டு வருகிறேன்.

(திரும்பிய மணவாளன் இன்னும் கோதை வரவில்லையே என்று பரபரக்கிருன், !

கமணவாளன் : கோதை: கோதை! இன்னுமா நீராடி

முடியவில்லை...ஐயோ உனக்கு நீந்தத் தெரியாதே...

முதலை மடுப்பக்கம் போகாதே என்று பலமுறை சொல்லியிருக்கிறேனே கோதை...

(சுனையை நோக்கி ஓடுகிருன். அங்கே நீராடுகிற அரவம் இல்லை. சுளைக் கரையில் பறித்துவைத்த தாமரைப் பூவோடு குடம் மட்டும் இருக்கிறது. முதலை மடுவின் நீர்ச்சுழிப்பில் சற்று முன் அவன் அணிவித்த மகிழமலர் மாலை மட்டும் மிதந்து தத்தளிக்கிறது. பார்த்ததும் கதறுகிருன்.) மணவாளன் : அடி பாவீ! கோதை! என்ன காரியம்செய்து

விட்டாயடி பாவீ... -

(மலைப்பகுதியெங்கும் மணவாளனின் குரல் எதிரொலிக் கிறது. குடத்தின் அருகே, தாமரைமலரோடு சில ஓல்ை கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவன் குமுறியழுதபடி அவற்றை எடுத்துப் படிக்கிருன்.1 மணவாளன் : (படிக்கிருன்) என் ஆருயிர்க் காதலர்க்கு அநேக வணக்கங்கள்...அடிப் பாவி..இது என்ன கடித மடி...(மேலே படிக்கிருன்)...இந்த ஒலைகளை நீங்கள் எடுத்துப் படிக்கும்போது முதலை மடுவின் குளிர்ந்த நீரில் என் ஆவி கலந்து போயிருக்கும். உங்கள் பாதங் களில் சூடுவதற்காக இந்த ஒலையோடு இரண்டு தாமரைப் பூக்களையும் பறித்து வைத்திருக்கிறேன். உங்கள் பாதங்களைத் தழுவிக் கொண்டே சாகவேண்டு மென்று எனக்கு ஆசை. அவற்றைத் தழுவ முடியாத காரணத்தால் அவற்றைப் பற்றிய புனிதமான நினைவு