பக்கம்:புத்த ஞாயிறு.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


f

கோல் பட்டம் பெற்றனர். இவ்வாறு உயர் நிலையடைந்த காலத்துக்குப் பின்பு நெடு நாட்கள் கவனிப்பாரற்றுத் தாழ்ந்து தெருக் கூத்தாம் தொடக்க நிலைக்குப் போய். விட்ட நாடகக் கலையை மீண்டும் சில பெருமக்கள் தோன்றி உயர்நிலைக்குக் கொண்டு வர முயன்றனர், முயல்கின்றனர், முயல்வர்.

அடுக்கடுக்கான சம்பவக் கோவையும், உணர்ச்சிகர மான திருப்பங்களும் உள்ள கதை நாடகத்துக்குத் தேவை. உரையாடற் பேச்சாலும், மெய்ப்பாட்டாலும், இசை யாலும், சுவையை உண்டாக்கிச் சிறப்படைவது நடிப்பு. நடிப்பில் பிறக்கும் சுவை தோன்றுமிடம் ஒன்று நுகருமிடம் மற்ருென்று. தொல்காப்பியர் இருவகை நிலத்தின் இயல்வது சுவையே என்ருர். நடிக்கும்போது தான் மேற் கொண்ட பாத்திரத்தின் உணர்ச்சிக்கு ஏற்ப நடிகன் உண்டாக்கிக் கொள்ளும் தத்ரூபமான போலித் தன்மை தான் மூலமான முதற் சுவை. அதைக் காணும் அவை மக்களிடம் உண்டாகும் அனுபவம் கிளைச் சுவை நடிகன் சுவையை உய்ப்பவன். இரசிகன் சுவையைக் கண்டு அநுபவிப்பவன். மிகப் பலராகிய அநுபவிப்பவர்களின் முன் தனி ஒருவன் தனி ஒரு சுவையைத் தத்ரூபமாக நடித்துக் காட்டுவது சிரமமான காரியமல்லவா? எல்லோ ராலும் இயலாத அத்தகைய சிரமமான காரியத்தைச் செய்வதால்தான் நடிகனுக்குப் பெருமை. ஒன்பது வகைச் சுவைகளுக்கும் வெளியீடாக ஏற்படும் பாவங்களுக்குப் பழைய தமிழில் மெய்ப்பாடு' என்று பெயர். உணர்ச்சிகள் படியும் கண்ணுடியாகத்தானே மாறும் திறமை இருந்தால் நடிகன் வெற்றி பெற்று விடுகிருன். -

நாடகத் தமிழின் இலக்கணத்தையும் முறைகளையும் இக்காலத்திலும் அறிந்துகொள்ள ஏற்ற விதத்தில் உயர் தரமான நூல்களை எழுதி அளித்துள்ளனர் இரு பெரு. மக்கள். நாடகவியல்' என்னும் நூலை எழுதிய பரிதி