பக்கம்:புத்த ஞாயிறு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

கோதையின் காதலு.

களைத் தழுவிக் கொண்டே சாகிறேன். என்னுடைய புண்ணியப் பயன்களும், நான் நினைத்த நினைப்புக்களும் பரிசுத்தமாக இருக்குமானல் இன்னொரு பிறவியில் உங்களைப் பரிபூரணமாக அடைவேன். நீங்கள் அபூர்வ கவி, அபூர்வராகங்களின் பிறப்பிடம். பேரழகர், தீர ஆடவர், சுந்தரமான நினைவுகளைச் சுமந்துகொண்டு திரிகிறவர். என் ஒருத்தியின் பொருட்டு இந்தக் காட்டி லிருந்து வெளியேறவே முடியாமல் நீங்களும் உங்கள் திறமைகளும் அழிந்து வீணுவதை நான் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? தர்மபத்தினியாக இருக்கிறவள் கணவனுக்காகத் தன் உயிரையும் தியாகம் செய்து கணவனுடைய ஒற்றை உயிரோடு தானும் இரண்டறக் கலந்து விடலாம். நேற்று அந்தப் பாளையத்து இளவரசி உங்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தவற்றை யெல்லாம் கேட்டேன். நீங்கள் நாட்டு எல்லைக்குள் புகுந்து புகழ்பெறத் தடையாக இருப்பவள் இழிகுலத் தினளாகிய இந்தப் பேதைக் கழைக் கூத்திதான் என். பதை என் செவிகளாலேயே கேட்டேன். நான் உங்கள் தடந்தோள்களில் மணக்கப் பிறந்த பூமாலை. நீங்களில் லாது எனக்கு உலகமில்லை. நான் செத்தொழிந்த மறு விநாடியிலிருந்து உங்கள் புகழ் உலகெல்லாம் பரவி நீங்கள் பெருமை பெறுவதை ஆவியாக இருந்து பார்க்கக் காத்திருப்பேன். சீதமதி முகமும் சீர்முத்துப் புன்னகையு. மாகக் கழைக் கூத்தாடும்போது முதன் முதலாக் உங்கள் கண்களுக்கு எப்படித் தோன்றி உங்களைக் கவி பாட வைத்தேனே அப்படியே இடைவிடாமல் உங்கள் நினைவில் நான் புன்னகையோடு இருப்பேன். என்னை வாழ்த்தி வழியனுப்புங்கள். மீண்டும் அடுத்த பிறவியில் உங்கள் பாதங்களைத் தொழுவதற்குப் பிறக்கிறேன். அதுவரை என்னை மன்னித்துக் கொண்டிருங்கள். 'தன்னுடைய புத்திக்குப் பரம்பரை உண்டாக்காமல்

தன்னுடனேயே அதை அழித்துக் கொண்டு சாகிற, கலைஞன் இந்த உலகத்துக்குத் துரோகம் செய்தவனகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/80&oldid=597445" இலிருந்து மீள்விக்கப்பட்டது