பக்கம்:புத்த ஞாயிறு.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 79

விடுவான்’ என்று நேற்றுப் பாளையத்து இளவரசி கூறிய வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்காகவே பிறந்தவள். -

உங்கள் அடியாள் கோதை .

[படித்து முடித்ததும் ஒலை மணவாளனுடைய கையி லிருந்து நழுவி வீழ்ந்தது. அவனுடைய கண்முன்னுல் மலைகள், குடம், தாமரைப்பூக்கள், மடுவில் சுழித்துக் கொண்டிருந்த மகிழ மலர்ச்சரம் எல்லாமே சுழல் கின்றனர் ... ",

மணவாளன் : (அடக்கமாட்டாத ஆத்திரத்தோடு) அடிப் பாவி! இப்படியா செய்து விட்டாய்? இந்தப் பாழாய்ப் போன பாளையத்து இளவரசி ஏன் இங்கு வந்தாள்? இத்தனைகாலத்துக்குப் பிறகு இங்கே எதற்காக என்னைத் தேடிவந்தாள்? ஏன், என்னுடைய கலையுணர்ச்சியின் இழப்பை எனக்கு நினைவூட்டித் தொலைத்தாள்...? (புலம்புகிருன் அழுகிருன்)

காட்சி-10

(கோதை காவியமாகி நீண்ட நாட்களாகிவிட்டன. மூங்கில் காட்டிலும் மலையடிவாரத்திலும் சுனைக்கரை யிலும் பித்தனப்போல் திரிந்து கொண்டிருக்கிருன் மணவாளன். அவனுக்கு மனநிம்மதி தருகிற ஒரே நாள் இன்னும் வெள்ளிக்கிழமை மட்டும்தான். அப்படியொரு வெள்ளிக்கிழமையில் விடியுமுன்பே எழுந்து மலையடி வாரத்து மகிழமரங்களின் அடியில் உதிர்ந்து கிடக்கும். பூக்களை அள்ளிக் கொணர்ந்து அழகிய மாலையாகக் கோத்து, அந்த மாலையைக் கோதையை விழுங்கிய முதலை மடுவில் போடுகிருன்.) -

மணவாளன் : (தன்னுரை) கோதை! எத்தனை வெள்ளிக் கிழமைகள் வந்துபோய் விட்டன! மடுவின் நீர்ப்பரப்