பக்கம்:புத்த ஞாயிறு.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 கோதையின் காதல் புக்கு மேலே மூழ்கியெழுபவளைப் போல நீயும் எத்தனை காலம்தான் இந்த மகிழமலர் மாலையைக், கழுத்தில் தாங்கிக் கொள்ளப் போகிருப்? (பெருமூச்சு விடுகிருன்) 1.யாரோ பின்னல் வருவது போல் அரவம் கேட்டுத் திரும்புகிருன்)

காரியஸ்தர் : ஐயா...அரண்மனையிலிருந்து வருகிருேம்.

மணவாளன் : என்ன செய்தி இன்னும் எல்லாம்தான்

முடிந்து போயிற்றே!

காரியஸ்தர் : மன்னிக்கவேண்டும். தாங்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பி வந்து விருப்பம்போல் அரண்மனைக் கலைஞராக இருந்து தங்கள் கலைகளையும் புகழையும் வளர்க்க வேண்டும் என்று பாளையத்து இளவரசியார் விரும்புகிருர்கள். தங்களிடம் இதைத் தெரிவித்து அழைக்கச் சொன்னர்கள்.

கி.மணவாளன் : (அலட்சியமாக) வருவதும், வராததும் என்னுடைய விருப்பம்! போய்ச் சொல்லுங்கள் உங்கள் இளவரசியிடம்...மணவாளனுடைய அபூர்வராகங்கள் எந்த நினைவுகளிலிருந்து செழித்தனவோ அந்த இனிய நினைவுகள் இந்த முதலை மடுவிலேயே மூழ்கிவிட்டன என்று போய்ச் சொல்லுங்கள்.

அவனுடைய பண்ணும் பாட்டும் கலையும் கற்பனைகளும் இந்த மலையடிவாரத்துச் சுனையைச் சுற்றியே வட்ட மிடுகின்றன. அவன் இந்த உலகத்தையும், உலகத்து மனிதர்களையும் பார்க்கவே கூசுகிருன். மணவாளனுக்கு அவர்களைப் பிடிக்கவில்லை. அவன் அவர்களைத் தொழவோ மதிக்கவோ விரும்பவும் இல்லை. உலகத்தில் வகை வகையாக மனிதர்கள் வகுத்துக் கொண்டிருக் கின்ற பொய்யான உயர்வு தாழ்வுகளையும் போலிக் கெளரவ முறைகளையும் பார்த்து அவன் பயப்படுகிருன். அவனே இந்த உலகத்துக்கு மறுபடியும் அழைக்க வேண்