பக்கம்:புத்த ஞாயிறு.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


84 கோதையின் காதல்

ஒருவன் : அண்ணே! வாங்க ஒடனே அரமனைக்குப் போவ இணும்...அங்கே போயிப் பாட்டுக்காரத் தம்பி செத்துக் கெடக்குன்னு சொல்லணும்...வாங்க...

(போகிருர்கள்)

காட்சி-12

மறவர்கள் சேதி சொல்ல மோகனவல்லி பேயறைந் தவள் போல் துடிக்கிருள். மெளனமாகிருள்.)

மோகனவல்லி : தாத்தா! உடனே புறப்படுங்கள், எனக் குத் துணை வாருங்கள். மலையடிவாரத்துக்குப் போக வேண்டும் (விம்முகிருள்) காரியஸ்தர் : இவ்வளவு அகாலத்தில் இருட்டிலா அம்மா? மோகனவல்லி ஆமாம்! புறப்படுங்கள். தாமதிக்காதீர்கள். 1.எல்லோரும் புறப்படுகிறர்கள். மலையடிவாரத்தில் துரங்குகிருற்போலக் கிடக்கும் மணவாளனப் பார்த்து விம்மி வெடிக்கிருள் மோகனவல்லி]

காரியஸ்தர் : அழாதே தாயே! கதறி அழுது என்ன பயன் இந்த உலகில் மிக அபூர்வமான கலைஞர்களெல்லாம் உயர்ந்த மணமுள்ள நல்ல பூக்களைப் போல் பூத்து விரைவாக வாடி உதிர்ந்து போய்விடுகிரு.ர்கள். இந்த உலகம் மிகவும் துரதிருஷ்டமுள்ள உலகம் அம்மா! அபூர்வமான சாமர்த்தியங்கள் எல்லாம் இங்கே அதிக நாள் தங்குவதில்லை.

மோகனவல்லி துயரம் பீறிடுகிற குரலில் ஐயா இந்த மலையடிவாரம் மிகவும் பாக்கியம் செய்த இடம். இந்த இடத்தில் இரண்டு தேவர்கள் தங்கள் ஆயுள் பரியந்தம் வாழ்ந்திருக்கிருர்கள். இல்லை! இல்லை! ஆயுள் பரியந்தம் முழுமையாக வாழ்ந்து இந்தத் துரதிர்ஷ்டம் பிடித்த உலகத்தை அதிர்ஷ்டமுள்ளதாக்கத் தயங்கிக் கொண்டு பிஞ்சிலேயே வாடிப் போய்விட்டார்கள். அந்தத் தெய்