பக்கம்:புத்த ஞாயிறு.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 5.

வீகக் கலைஞர்களுக்குப் பாளையத்து அரண்மனையிலிருந்து செலவழித்து இங்கே ஒரு மண்டபம் கட்டவேண்டும். அந்த மண்டபம் அவர்களுடைய கோயிலாயிருக்கும். அதில் வெள்ளிக் கிழமை தவருமல் விளக்கேற்றவும் மான்யம் எழுதிவைக்க வேண்டும். இந்தப் பக்கம் நாச்சியார் புரத்து மக்கள் எவரானுலும் மலையடி வாரத்து மகிழ மரங்களிலிருந்து கை நிறையப் பூக்களை அள்ளி வந்து இந்தச் சுனையில் தூவிக் கைகூப்பி வணங்கி விட்டுத்தான் இவ்வழியில்மேலே நடந்து செல்ல வேண் டும். இந்தக் கட்டளையை எவரும் மீறலாகாது...காலம் காலமாக இந்தக் கட்டளை நீடிக்க வேண்டும். இங்கே அமரபதவிஅடைந்த தெய்வீகக் காதலர்களை உலகம் என்றென்றும் மறக்காமலிருக்க இந்த வழக்கங்கள் துணைபுரியும். - காரியஸ்தர் : அப்படியே செய்யலாம் அம்மா! உங்கள் கட்டளைப்படியே சாஸனம் எழுதச் செய்கிறேன் இப் போது அகாலமாகிறது. அரண்மனைக்குத் திரும்பலாமா அம்மா? - மோகனவல்லி (ஒரு சோகச் சிரிப்புடன்) ஆம்! போகலாம் ஒரு விடிை பொறுத்திருங்கள். இதோ வந்துவிட்டேன். [சுனையிலிருந்து இரண்டு தாமரை மலர்களைப் பறித்துப் பயபக்தியோடு மணவாளனின் பாதங்களில் ஒற்றி வணங்குகிருள். முதலை மடுவின் சுழிப்பருகே சென்று அங்கே மணவாளன் போட்டிருந்த மகிழம்பூச்சரம் மிதப்பதையே சற்று நேரம் பார்த்துக் கொண்டு நிற்கிருள்.) . முதியவர்: வாருங்கள் தாயே! போகலாம். நேரமாகி

றதே...! - . . . - மோகனவல்வி: (அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாத வளாய்) நான் தெரியாத்தனமாய் இதுவரை மனிதர்" களோடு மனிதர்களாக இருந்து உங்களுக்குக் கெடுதல் கள் செய்து விட்டேன். நீங்களோ, மனிதர்களோடு: