பக்கம்:புத்த ஞாயிறு.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7

மாற்கலைஞரும், மதங்க சூளாமணி என்னும் நூலே எழுதிய விபுலானந்த அடிகளும, என்றும் தமிழர்களின் நன்றிக்கு உரியவர்கள். ஆங்கிலம், தமிழ், வடமொழி ஆகிய மூன்று: மொழி நாடக இலக்கிய வளத்தையும் ஒப்பு நோக்கி எழுதப்பட்ட நூலே மதங்க சூளாமணி. மதுரைத் தமிழ்ச் சங்கத்தினரால் வெளியிடப் பெற்ற இவ்வரிய நூல் இப்பொழுது பதிப்பற்றுப் போனமை தமிழுக்குப் பெரிய இழப்பே ஆகும். . -

இனி நூல்களும் நாடகக் கதைகளும் எழுதியதோடு அமையாமல், நடித்தும் நாடகக் கலையை வளர்க்கப் பல்லாற்ருனும் பாடுபட்டவர்கள் சிலரை நினைக்கவேண்டும். சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்தமுதலியார், நவாப் இராச மாணிக்கம், முத்தமிழ்க் கலாவித்துவரத்தின் டி. கே. எஸ். சகோதரர்கள், சேவா ஸ்டேஜ்காரர்கள், மனேகர், சோ குழுவினர் போன்ற பலர் நாடகக் கலையை வளர்த்து வந்தார்கள்-வருகிரு.ர்கள். ஆயினும் தமிழ் நாடகக் கலை இன்னும் மேல்நிலை பெறுவதற்கு முயன்று கொண்டே இருக்க வேண்டும். நாடகத்துக்கென்றே அமைந்து நாள்தோறும் பல ஆயிரம் திரட்டித் தரும் நாடக அரங்கங்கள் கல்கத்தா நகரத்தில் இருப்பதுபோல் சென்னை, மதுரை, திருச்சி முதலிய தமிழ் நகரங்களில் ஏற்பட வேண்டும். நாடகத்தில் நடிக்கும் நடிகர்களின் வறுமையும், வாழ்க்கைத் தொல்லைகளும் குறைந்து வாழ்க்கைத் தரமும், வசதியும் பெருக வேண்டும். நாடக மேடை அரங்க நிர்மாணத்துக்குப் புதுமையான பல நவீன சாதனங்களையும், உத்திகளையும் மேற்கொள்ள வேண்டும். மக்களின் ஆதரவும், கலைஞர்களின் திட நம்பிக்கையும் இருந்தால் நாடகம் புனிதமான கலையாக வளர்ந்துவிட முடியும். : .

- நாடகம் எழுதுபவர்களும், நடிப்பவர்களும் நாடகக் குழு நடத்துபவர்களும், ஐயோ! பொருட்காட்சிகளும்