பக்கம்:புத்த ஞாயிறு.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 89

மேலாளர்: காரியதரிசி வேண்டுமென்று நாம். செய்த விளம்பரத்தைப் பார்த்து விட்டு இந்தப் பெண்மணி நேரில் வந்திருக்கிருர், ஐயா!

குமாரகவி அப்படியா! மகிழ்ச்சி! வரட்டும்...

சுகுளு: இந்த வாரம் மணிமாலை இதழைப் பிரித்ததும் ஒரே ஏமாற்றமாகப் போயிட்டது ஐயா! உங்கள் 'திராட்சைத் தோட்டம்' தொடர் ஏன் வரவில்லை?

குமாரகவி (சிரித்துக்கொண்டே) திராட்சைத் தோட்டம் வராததளுல்தான் நீ இங்கு வந்திருக்கிருய் என்பது உனக்குத் தெரியுமா?

சுகுளு: அதெப்படி ஐயா? நான்...நான் வந்து...

குமார கவி: எப்படி என்பதையும் நானே சொல்லி விடுகி றேன். திராட்சைத் தோட்டத்’தை இரவுபகலாக என் உடனிருந்து, தான் சொல்லச் சொல்லக் கேட்டு எழுதி-எழுதியதை மீண்டும் படித்துக்காட்டி-படித்த தில் நான் திருத்தம் சொல்லி-நான் சொல்லிய திருத் தங்களுடன் மறுபடி செப்பனிட்டு அச்சுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த காரியதரிசி திடீரென்று என்னே விட்டுவிட்டுப் போய்விட்டான்... சொல்லாமல் கொள்ளாமல் கொஞ்சம் பணத்துடன் கம்பி நீட்டி விட்டான். இந்தக் கதையை, நான் போதாத வேளை யில்தான் தொடங்கினேன் போல் இருக்கிறது. ஒரு வாரத்துக் கதையை நான் கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப்போது சிந்தித்துச் சிந்தித்துச் சொல்வேன். அப்படிச் சொல்லச் சொல்லக் கேட்டு எழுதி, எழுதி யதை மறுபடி வாசித்து, எனக்கு மனநிறைவு தருகிற விதத்தில் மெருகேற்றி, நயமாக்கித் திருத்தி எழுதச் சொல்லி அச்சுக்கு அனுப்பிவைக்கக் குறைந்த பட்சம் வாரத்துக்கு நான்கு நாட்களாவது வேண்டும். அதற்கு அப்புறம் அந்தக் கையெழுத்துப் படியின் பூகுஃபை' பு-6 - - - -