பக்கம்:புத்த ஞாயிறு.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தா. பார்த்தசாரதி 93

நீ உன் கூந்தலில் சூடிக்கொண்டு வந்திருக்கும் மல்லி கைப் பூவின் மணமும், கைகளில் ஒலிக்கும் வளைகளின் ஒலியும் என்னே நாடி ஓடிவந்த காரணத்தால்தான் ஒரு பெண் வந்திருக்கிருள் என்பதையே நான் உய்த்து உணர்ந்து கொண்டேன். வாய் அதிராமல் மெல்லிய குரலில் சங்கீதத்தைப்போல் நிரவிப் பேசுகிருய் நீ. தரையதிர்ாமல் நடப்பதும், வாயதிராமல் பேசுவதும் என்னைக் கவருகிற உயர்ந்த குணங்கள். இவற்றைத் தவிர உன்னிடமுள்ள வேறு திறமைகளை இனி நீதான் எனக்குச் சொல்ல வேண்டும்.

சுகுணு: நன்றி ஐயா! எனக்கு ஆங்கிலமும் தமிழும் நன்ருக எழுதப்ப்டிக்கத் தெரியும். கையெழுத்து ஓரளவு அச்சுக் குண்டாக இருக்கும். தட்டெழுத்தில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்கிறேன். வீணை வாசிப்பேன். கொஞ்சநாள் அடுத்த தெரு நட்டுவளுருடைய நாட்டியப் பள்ளியில் நாட்டிய வகுப்புக்கும் போய் வந்திருக்கிறேன். கார் ஒட்டவும் பழக்கம் உண்டு. சும்மா, ஒரு தோழியின் காரில் எல்’ அட்டை மாட்டி வேடிக்கையாக அவள் பழகியபோது நானும் பழகினேன். எனக்கு நன்ருகக் கார் ஒட்டவந்துவிட்டது. ஆனல் அவளுக்கு வரவில்லை. அந்த நேரத்திலேயே டிரைவிங் லேசன்ஸ் வாங்கி விட்டேன் நான். என்னுடைய இவ்வளவு திறமைகளும் உங்களுக்குக் கொஞ்சமாவது பயன்பட முடியுமாளுல் அதற்கு நான் மிகவும் பேறு பெற்றவளாவேன் ஐயா!'

குமாரகவி: அதிர்ஷ்டம், ப்ேறு என்றெல்லாம் சொல்லாதே - -

அம்மா! இவற்றை நான் ஒருபோதும் நம்புவதேயில்லை. நமக்கு நல்லபடியாக முடிகிறவற்றையெல்லாம் அதிர்ஷ் டம் என்றும், வேறுவிதமாக முடிகிற்iற்றையெல்லாம் துர் அதிர்ஷ்டம் என்றும் வகுத்து உலக வழக்கில் மிகவும் குழந்தைத்தனமானதொரு தத்துவத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிருேம். அது போகட்டும்? நீ மணிமாலை