பக்கம்:புத்த ஞாயிறு.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


94 புத்த ஞாயிறு:

இதழ்களை ஆரம்பத்திலிருந்து விடாமல் படித்திருக் கிருயா பெண்ணே...?

சுகுளு: பெரும்பாலும். மணிமாலை இதழ்கள் எல்லா வற்றையுமே நான் படித்திருக்கிறேன் ஐயா! மணிமாலே இதழ்களைத் தவிர, உங்களுடைய கதைகளையும் நாவல் களேயும், கவிதைகளையும் நூல்வடிவிலும் பலமுறை படித்திருக்கிறேன். பாற்கடல்' என்ற நாவலில் பேசிய பேச்சுக்குத்தான் சொற்கள் சான்முக நிற்கும். பேசாத பேச்சுக்கு மனம்தான் சாட்சி. மனம் மட்டுமே சாட்சியாக நிற்கிற பல நினைவுகளுக்கு, நிதானமும் பொறுமையும் இல்லாத இந்த அவசர உலகத்தில் நிரு. பணமே கிடையாது போல் இருக்கிறது' என்று தன் காதலை நிரூபிப்பதற்குச் சொற்களையும் பேச்சை யும் சாட்சியாக்க முடியாமல் தவிக்கும் ஒர் ஊமைப் பெண் எண்ணுவதாக எழுதியிருக்கிறீர்கள். அந்த இடத்தை மட்டும் நான் ஆயிரம் தடவைகளுக்குக் குறையாமல் படித்திருப்பேன். மகாகவி தாகூரின் ‘சுபாஷிணி' யை விடஉங்களுடைய பாற்கடலில் வருகிற ஊமைப்பெண் அருமையான பாத்திரப்படைப்பு. தன் னுடைய நினைவுக்குச் சொற்களைச் சாட்சியாக அழைத் துப் பேச முடியாத அவள் தவிப்பை நீங்கள் மிக -91էք காகச் சித்தரிக்கிறீர்கள் ஐயா!

குமாரகவி: அதிகம் புகழாதே பெண்ணே! புகழ் என்னைச் சோர்ந்து போகும்படி செய்து விடுகிறது. ஒரு நிலைமைக்கு மேல் பழிக்கு அஞ்சுவது போல் புகழுக்கும். கூட அஞ்சி விலகி ஒதுங்க வேண்டியிருக்கிறது அம்மா! (சிரிக்கி ருர்) . . , - - - - - தொலைபேசியின் மணி ஒலிக்கிறது. குமாரகவி தட்டுத் தடுமாறி எழுந்துபோய்ப் பேச முயல்கிருர். அவரை அமர்த்திவிட்டுசுகுளுவே எழுந்துபோய் அதை எடுக் கிருள்):