பக்கம்:புத்த ஞாயிறு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ புத்த ஞாயிறு

துண்டு. கைப்பழக்கத்தில் கூடியவரை அபசுவரமில் லாமல் ஏதோ வாசிக்க வரும். உனக்குப் பிடித்ததை நீ வாசியேன்! (எழுந்திருந்து வீணையை எடுத்துத் தர முயல்கிருர்)

சுகுளு: நீங்கள் அப்படியே அமர்ந்திருங்கள் ஐயா! வீணை

எதிரேதான் இருக்கிறது. நானே எடுத்து வாசிக் கிறேன்... - . . - (சற்றுநேரம் வீணையை எடுத்து வாசிக்கிருள். அவளுக் குப் பிடித்த தேவகாந்தாரி ராக வீரசாகர' என்கிற பாடல் காற்றில் மிதந்து அறையை நிறைக்கிறது.1

குமாரகவி: அற்புதம், பெண்ணே! (உற்சாகத்தோடு கைகளைத் தட்டி ஆரவாரம் செய்கிருர்) ஏதேது கச்சேரியே செய்து விடுவாய் போலிருக்கிறதே! இவ் வளவு தெரிந்துவைத்துக்கொண்டு கொஞ்சம் வீணை யும் தெரியும் என்ருயே, பார்க்கலாம்! -

சுகுணு: மன்னிக்கவேண்டும் ஐயா! உங்கள் முன்னல்

ஒன்றும் தெரியாதவளாகிப் பிரமித்துத் தயங்கி நிற்ப

தில்தான் நான் மகிழ்ச்சியடைய முடியும்.

குமார கவி: இன்னும் ஒரு பாட்டை நீ வாசிக்கலாமே! தேனுகாவில் எப்போதுமே தோடிராகத்தின் பல்லா யிரம் நயங்களில் மிக அபூர்வமானதொரு நயத்தின் சாயை படர்ந்திருக்கும். அதை நான் மிகவும் இரசிப் பேன்...

(சுகுளு மீண்டும் ஒரு பாடலை தேனுகா ராகத்தில் வீணையில் வாசிக்கிருள்)

திரை காட்சி-2

மணிம்ால் அலுவலகத்தில் முறைப்படி சுகுளு ங்ேகலக்கு அமர்ந்து சில மர்தங்களாகின்றன. ஒருநாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/98&oldid=597463" இலிருந்து மீள்விக்கப்பட்டது