பக்கம்:புத்த ஞாயிறு.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


த்ரி. பார்த்தசாரதி 97

குமாரகவியுடன் தனிமையில் அமர்ந்து அவரது காரைச் செலுத்திக்கொண்டு செல்கிருள்.) சுகுளு: விளையாட்டுப்போல் நான்கைந்து மாதங்களாகி விட்டன ஐயா! கொடுமைக்கார மாமியின் பிடியில் சிக்கி உழன்ற எனக்கும் ஒரு விடிவு காலம் பிறந்தது.

குமார கவி: ஆமாம் பெண்ணே! அந்தக் கதையையெல் லாம்தான் என்னிடம் விரிவாகவே சொல்லியிருக் கிருயே! வாலைப் பருவத்திலேயே தாய் தந்தையரை இழந்து, மாமன் வீட்டில் வளர்ந்து கருணையையும் அன்பையும் அறியாத உன் மாமியின் கொடுமைகளினல் பொறுமையையும் நிதானத்தையும் நீ கற்றுக்கொண் டது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று? அமைதியே உருவான உன் மாமனின் அன்பிலே மட்டும் நம்பிக்கை வைத்தப் படிப்பு முதல் உலகம்வரை ஓரளவு கற்றுத் தேர்ந்தாய். உன்னுடைய துறுதுறுப்பான கலே ஆர்வத்தை ஒடுக்கி அடக்கிவிட உன் மாமியால் கூட முடியவில்லை. அந்த வீட்டுக்குப் பாரமாக இருக்கக் கடிடாது என்று உத்தியோகமும் உறவும் தேடி உலகத்தை எதிர் பார்த்துக்கொண்டிருந்த உனக்கு இந்தக் குமாரசுவியிடம் புகவிடம் கிடைத்தது. இரண்டு ஆதரவற்றவர்கள் ஒன்று சேர்ந்தபோது தனித்தனியே நம் இருவருக்கும் துணை கிடைத்துவிட்டது...இல்லையா? சுகுணு: வெறும் துணை என்று அதிக நாட்கள் சொல்

லிக்கொண்டிருக்க முடியாது போலிருக்கிறது ஐயா! குமாரகவி: என்ன சொல்கிருய் நீ. பெண்ணே! சுகுளு: ஆமாம் என் தெய்வமே! இனி உங்களை நான் இப்படி அழைப்பதுதான் பொருத்தமுடையதாக இருக்கும் போல்தோன்றுகிறது. ஏதாவது ஒர் உறவைக்கற்பித்துக் கொள்ளாமல், உத்தியோகமாகவோ உபசாரமாகவோ மட்டும் ஒரு பெண் ஓர் ஆட்வன் நெருங்கி வாழ்வதைக் கவுரவமாகவோ நாகரிகமாகவோ அங்கீகரித்துக்கொள்