பக்கம்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழைப்பழம்


வந்து, "கடைசி அடி”யை எனக்கு முடிக்கத் தெரியவில்லை; அதை முடித்துக் கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். பார்த்தார் கவியாசர்: தனக்குள் சிரித்துக் கொண்டு,........ "எனும் புராணக் கூற்றின்னக் கொள்வாருண்டோ?" என எழுதி அதை முடித்துக் கொடுத்தனுப்பிவிட்டார் நகைச்சுவையிலும் கருத்து நிறைந்திருப்பதைப் பாருங்கள்.

4. வாழைப்பழம்

நம் கவிஞருக்குப் பெரியம்மா ஒருவர் உண்டு. ஒரு சமயம் தான் வாங்கி வந்த வாழைப்பழச் சீப்பில், கவிஞர், கவிஞரின் சகோதரர் எல்லாருக்கும் ஆளுக்கொன்று கொடுத்துவிட்டு, மீந்த பழத்தைப் பழங்கல அறையில் ஒளித்துவைத்து, 'அதை எடுத்துத் தின்னும்படி' பெரிய பிள்ளைக்குச் சைகை காட்டினாள். எப்பொழுதுமே அவர்களுக்கெல்லாம் மூத்த பிள்ளையிடம் அதிக அன்பு (இளைய பிள்ளை நம் கவிஞர்) இந்த வஞ்சனையைக் கவிஞர் கவனித்துக் கொண்டார். பெரிய பிள்ளையோ பெரியம்மாவின் சைகையைப் புரிந்து கொள்ளவில்லை. பெரியம்மா தன்வேலை முடிந்ததென வேறு வேலையாகச் சென்றதுதான் தாமதம். கவிஞர், பழங்கல அறைக்குள் புகுந்து, பழங்களை, ஒவ்வொன்றாகத் தின்று தீர்த்தார். தோல்களை எல்லாம் பழம் இருந்த இடத்திலே வைத்துவிட்டு ஒடியே போய்விட்டார்.

பெரியம்மா, பெரிய பிள்ளையை மறுபடியும் கூப்பிடவே, அவர் வந்து அறையைத் தேடிப்பார்த்ததில் பழத்தோல்தான்


13