பக்கம்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தங்கக்கலசம்


அருணாசலக்கவியின் பாடலாகிய "ஏன் பள்ளி கொண்டீர் ஐயா" என்ற பாடலைத் தொடங்கினார். பாடமும் நடந்து வந்தது; இடையில் கற்றுக்கொள்பவருக்கு சற்று அலுப்புத் தட்டி விட்டது.. பாடல் மூலமாகத் தன் வகுப்பைக் கூறித் தன்னை இழிவுபடுத்துவதாக எண்ணி வருந்தினார். இதற்கு என்ன வழி என்பதை யோசிக்க, நம் கவிஞரிடம் வந்து நடந்தவற்றைக் கூறினார்.

நடைமுறையிலே - சாதாரணமாக, ஹாஸ்யத்துக்காகவே நம் கவியரசர், நுட்பமாகவும், கேலியாகவும் தோழர்களிடம் குறும்பு செய்வது வழக்கம். இப்பொழுது கேலிக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததும் கேட்க வேண்டுமா? சந்தர்ப்பத்தை ஒட்டிக் கவிஞர் 'பள்ளி'யாரிடம், "எட ராம சாமி தாதுவனே" என்பதாகச் சொல்லிக் கொடுத்தார். "அட ராமசாமி தூதுவனே" என்பது அருணாசலக் கவியின் பாடல். அதையே திருத்திப்பாடிப் பாடச் செய்தார். கற்பித்தவர் வெட்கி, மீண்டும் இசை பயிற்றுவிக்க முன்வரவில்லை. சிறிது நாணமும் அடைந்தார். இந்த வெற்றிக்குப் பின்னர், அந்தப் பள்ளியார் நம் கவிஞருக்கு மிக்க மதிப்புச் செலுத்த ஆரம்பித்தார்.

6. தங்கக்கலசம்

நம் கவிஞர் பொழுது போக்குக்காக மாலை வேளையில் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து அமைதி காண்பது வழக்

15