பக்கம்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தாராளம்


ஒருவர். ஏனையோர்களில், வணிகர், நீதிபதி, வழக்கறிஞர் பலரும் இருந்தனர். எல்லோரும் பல விஷயங்களைப்பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயம் சென்னை நகரத்தைப்பற்றிய பேச்சு வந்தது. நீதிபதிக்குச் சென்னை நகரம் தெரியாது; அவர் பார்த்த தில்லை. அதற்காக அவர் அந்தப் பேச்சைப் பேசும்போது காணப்பட்டு, கவிஞரிடம், அந்தப் பேச்சை அதிகமாக இழுக்காதீர்கள்; எனக்குப் பட்டணம் தெரியாது” என்று மிக இரகசியமாகச் சொன்னார். கவிஞரும் அதைக் கவனத் துடன் கேட்டுக்கொண்டு, உடனே சொன்னார். அது சரி, அதேபோல் சைக்கிள் பேச்சு வந்தால், நீங்கள் அதிகமாக இழுக்காதீர்கள் என்று இரகசியமாகக் கூறிவைத்தார் நம் கவிஞர். ஏனென்றால், கவிஞருக்குச் சைக்கிள் விடத் தெரியாது!

8. தாராளம்

கவிஞர் பாரதிதாசன் அவர்கள், பழகும் எல்லோரிடமும் ஹாஸ்யமாகவும், சுவாரஸ்யமாகவும் பேசுவார். பழகு பவர்களிடத்தில் பெருமை சிறுமை பார்க்கமாட்டார். படித்தவர்-படிக்காதவர் என்ற வித்தியாசம் கிடையாது. எல் லோரிடத்திலும் அன்பும்-ஆதரவும் காட்டுவார். பலருக்கு ஆலோசனைகளும் கூறுவார். யார் யாருக்குச் சிபார்சு கடி தம் கேட்டாலும், "தம்பி! பேனா, தாள் கொண்டுவா!" என்று கூறி உடனே, வேண்டுபவருக்கு வேண்டுவன தருமாறு கடி }T