பக்கம்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

தம் எழுகிக் கொடுப்பார். சிலருடன் தாமே நேரில் போய் அவரவர்களுக்கு ஆகவேண்டியவற்றை நிறைவேற்றிக் கொடுப்பார். தம் பணத்தைச் செலவு செய்ய நேர்ந்தாலும் அதற்காக அஞ்சமாட்டார்.

9. விழிப்பு

கவிஞர் பாரதிதாசனின் உருவம் காண்போரைக் கவர வல்லது. அவர் உள்ளூரிலிருந்தாலும், வெளியூர்களில் சுற்றுப் பிரயாணம் செய்தாலும் ரசிகர்கள் அவரை எளிதில் கண்டு விடுவார்கள். பலருக்கு அவரைத் தெரியும். அவருக்கு ஒரு சிலரைத்தான் நினைவு இருக்கும். பல நாட்கள் தொடர்ந்து பழகிக் கொண்டே இருந்தால்தான் ஞாபகம் வைத்திருப்பார். பழகிக்கொண்டே இருந்த சிலர் பல ஆண்டுகளாகக் காணா மல் இருந்தால், அவர்களின் உருவமே நினைவுக்கு வராது. ஒரு உதாரணம்: கிரு. தி. ஜ. ர. வும் பாரதிதாசனும் வெகுநாட்களுக்கு முன்பே பழகியவர்கள்; இடைக்காலத்தில் தொடர்பும் சந்திப்பும் இல்லை. கவிஞர் சென்னைக்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து, அவ ரைக்காண தி. ஜ. ர. முல்லைப் பதிப்பகத்துக்கு வந்தார். கவிஞர் நின்று கொண்டிருந்தார்; தி. ஜ. ர. கவிஞரைக் கண்டார்; கவிஞரும் அவரைக் கண்டார்; இருவரும் கை கூப்பி மரியாதை செய்து கொண்டனர்; ஆனால் வந்தவர் தி. ஜ. ர .என்பது கவிஞருக்குத் தெரியாது. சிறிது விழித் தார். கவிஞருக்கு இந்த மாதிரி விழிப்பு ஏற்படும் என்பது எனக்குத் தெரியும். அதிக விழிப்புக்கு இடமில்லாமல்

18