பக்கம்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

"இவர்கள்தான் தி. ஜ. ர.” என்றேன் நான் ஓ! எனக்கு அப்பவே தெரியுமே!’ என்று சமாளித்துக் கொண்டு அவ ரைக் கட்டித் தழுவிக் கொண்டார். அந்தக் காட்சியை என்னவென்று வர்ணிப்பது? இருவர் கண்களிலும் அன்புஆர்வம், உற்சாகம் அத்தனையும் பிரகாசித்தன!

10. உணவு

கவிஞர் யாரிடத்தில் பேசினாலும் நிரம்ப உரிமை யோடு பேசுவார். ஆண் பெண் இருபாலாரிடத்திலும் மிக்க கலகலப்பாகவும் அன்பாகவும் பேசுவார். எந்த வீட்டுக்குப் போனாலும், தனக்கு விருப்பமானவற்றைத் தயார் செய்யச் சொல்லி, சுவையோடு உண்பதில் மிக்க பிரியம்.

ஒரு அன்பர் இருக்கிறார், அவருக்குக் கவிஞரிடத்தில் எல்லையற்ற அன்பும்-ஆர்வமும் உண்டு; கவிஞரைக் கண்டு விட்டால்-அல்லது வந்திருக்கிறார் என்பதைக் கேள்விப் பட்டாலும் சரி. உடனே தமது குதிரை வண்டியுடன் வந்து கவிஞரை அழைத்துக் கொண்டு தம் வீட்டுக்குப் போய்விடுவார். அங்கே போனதும் வகை வகையான பதார்த்தங்களை ஏராளமாகத் தயார் செய்யச் சொல்லி, கவி ஞருக்குப் படைத்து அவர் இன்புறுவார். இதில் அவருக்குச் சொல்லமுடியாத ஆனந்தம் ஏற்படும். ஆனால் கவிஞருக்குச் சில சமயங்களில் இதில் கஷ்டம் ஏற்பட்டுவிடும். ஏனென்றால் அந்த அன்பர் வீட்டுக்குப் போனால் குறைந்த பக்ஷம் மூன்று-நாட்களுக்குப் பிறகுதான் விடுதலை கிடைக்கும்; 19