பக்கம்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

எப்போது துவக்கி எப்போது முடிக்கிறான் என்பது நோக்கத்தக்கது. இனி, அம் முத்தம் எப்படிப்பட்ட அணி பெறுகிறது என்றால், அவன் இதழ் அவள் கன்னத்தில், *தாமரை போய் சந்தனத்தில் புதைந்தது போலும்" என் கிறார் எப்படிப்பட்ட கன்னம்? தமிழ்ச் சுவடிக் கன்னம். சுவடியானால் உணர்வு செலுத்தப்பட வேண்டுமல்லவா? அவன் இதழாகிய உணர்வு செலுத்தப்படுகிறது. அவ்வுணர் - வில் தட்டுப்படுகின்ற சுவையைக் கவிச் சுவையாக உருவகம் செய்கிறார். யாருக்கும் தெரியாமல் ஒரு முத்தம் விரைவாக நடந்து விடுகிறது. அதைக் கவிஞர் குறிப்பிடுகையில்: 'மான் வந்தாற்போல் வந்து, வாய்முத்தம் தந்துவிட்டுப் போய்விட்டாள் வீட்டுக்குள் பூங்கோதை". மருண்ட விழி யோடு அவள் தோன்றுவதைக் குறிக்க, மான் வந்தாற்போல என்றார், • , பிரிந்த தலைவி-தலைவன் சந்திக்கிறார்கள். அவர்களைச் சாக்காடும் நிழல்போல் தொடர்கிறது. அவன் முகத்தை அவள் அணைக்கிறாள். முத்தம் பெறுகிறாள். முத்தத்தின் முடிவில் தன்கையில் தாங்கியுள்ள அவன் முகத்தைப் பார்க் கிறாள். ஆனால் அவனுடைய முகத்தைக் காணவில்லை. "கடிதோடினாள் அத்தான்! என்று அழைத்தே நேர்ந்தோடும் இரு முகமும் நெருங்கும்போது நெடுமரத்தின் மறைவி னின்று நீள்வாள் ஒன்று பாய்ந்தது மேல்! அவன் முகத்தை அணைத்தாள் தாவி பளீரென்று முத்தம் ஒன்று பெற்றாள். சேயின், சாந்த முகந்தனைக் கண்டாள். உடலைக்காணாள்! தலைசுமந்த கையோடு நிலத்தில் சாய்ந்தாள். தீந்தமிழர்