பக்கம்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கவிதையில் புரட்சி

உயர்வினுக்குச் செத்தான். அன்பன் செத்ததற்குச் செத்தாள் அத்தென்னாட்டன்னம்.'

இதோடு ஐந்து முத்தங்கள்.

16. கவிதையில் புரட்சி

பாரதிதாசன் அவர்களை, நாட்டினர் 'புரட்சிக் கவிஞர்' என்று அழைக்கிறார்கள். 'பில்கணி'யத்தைத் தழுவி அவர் எழுதியுள்ள ஒரு நூலுக்குப் 'புரட்சிக்கவி' என்று பெயர் கொடுத்திருப்பதால், புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப் படுகிறாரா? அல்லது புரட்சி எண்ணங்களே அவர் கவிதை கள் உண்டாக்குவதால் அவ்விதம் அழைக்கப்படுகிறாரா? முதலில் பாரதிதாசன் என்ற புனைபெயரை அவர் வைத்துக் கொண்டது ஏன்? என்பதைத் தெரிந்து கொண்டாலே மேலே எழுந்த கேள்விகளுக்கு ஒருவாறு பதில் புரிந்துவிடும். கனக-சுப்புரத்தினம் என்ற நம் கவிஞருக்குப் பாரதி யார் இட்ட பெயர், நீ சுப்பிரமணிய பாரதியார் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக-சுப்புரத்தினம் என்பது. இவ்வாறே பாரதிதாசன் அப்போது தம் பெயரைக் குறிப் பிட்டுப் பத்திரிகைகளில் கவிதைகள்-கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். ஆயினும் அவர் பிரஞ்சிந்திய அரசாங்க அலுவலில் இருப்பவராதலால், தமக்கு ஒரு புனைபெயரைத் தேடிக் கொண்டார், 'பாரதிதாசன்’ என்று

அதன் பிறகே அவருக்கு புரட்சி எண்ணத்தை உண்டாக்கக்கூடிய பாடல்களை வெளியிட செளகரியமாயிருந்

27