பக்கம்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

முல்லை எங்ஙனம் மனமகிழ மணமுட்டுமோ, அங்ஙனமே முல்லை முத்தையாவின் எழுத்துக்களும் அகமலர மகிழுட்டும். அவர் முல்லை வெளியீட்டின் மூலம், தமிழ் உலகம் தமிழ் மணங் கமழச் செய்தாம் என்பதை யாவரும் அறிவர். அவர்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் புரட்சிக் கவி வெள்ளத்தைத் தமிழுலகத்தில் பாய்ச்சினவர். அவ் வெள்ளத்தால், பழமை என்ற வழுக்கைப் பாசிகளும், மூடப் பழக்கவழக்கங்கள் என்ற முடைநாற்றப் பொருள்களும் தமிழ் நிலத்தினின்றும் அடித்துக் கொண்டு போகப்பட்டன. அதற்காக அவருக்குத் தமிழுலகம் நன்றி செலுத்தக் கடப்பாடுடையது.

பண்டைக் காலத்திலே, நம் நாட்டிலே பல தமிழ் அறிஞர்கள் வாழ்ந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளும், பிற குறிப்புக்களும் இப்போது நமக்குக் கிடைத்தில. அக்காலத்திலுள்ள தமிழறிஞர்கள் இதில் அக்கரையும் செலுத்தவில்லை. ஆனால், ஒரிருவர், விநோதரசமஞ்சரி என்ற உரைநடை மூலமும், தனிப் பாடற்றிரட்டு என்ற தமிழ்ச் செய்யுட் கோவை மூலமும், சில குறிப்பிடத்தக்க புலவர்களின் ருசிகரமான நிகழ்ச்சிகளைக் குறிப்பட்டுள்ளனர். அவைகள் தான் நாம் அறியும் தமிழ்ப் புலவர் சரித்திரங்கள்.

நம் முல்லை முத்தையா அவர்கள் இதுபோன்ற குறை இனி ஏற்படா வண்ணம், பகுத்தறிவின்