பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 66 புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் இரக்கம் உடையவனா என்று பார்க்க வேண்டுமே ஒழிய அவன் சாதி சமயங்களைப் பார்த்தல் கூடாது. சாதி சமயங்களைப் பார்க்காது காதல் கொள்வதுதான் தமிழ்க் காதல். இதனை, யாயும் ஞாயும் யாரா கிய ரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் யுேம் எவ்வழி யறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!' என்ற குறுந்தொகைப் பாடல் குறிப்பால் உணர்த்து கின்றது. இதனை வலியுறுத்தவே கலப்பு மணம் வாழ்க’ என்ற தலைப்பில் பாடல் எழுதினார். அதில், அப்பா உண்மையில் அவரும் என்போல் மனித சாதி, மந்தி அல்லர் காக்கை அல்லர், கரும்பாம் பல்லர் சாதி சற்றும் என்கினைவில் இல்லை மாதுநான் தமிழனின மகளாத லாலே -பாரதிதாசன், காதற்பாடல்கள், ப. 93. என்ற அடிகள் பாவேந்தர் கலப்பு மணத்தை எந்த அளவிற்கு வரவேற்று வாழ்த்துக் கூறுகின்றார் என்பதனைப் புலப் படுத்துகின்றது. பாவேந்தருக்குப் புரட்சிக்கவி' என்ற பட்டம் அளிப்பதற்கு மூலமாக இருந்ததே கலப்பு மணந்தான். அவர் எழுதிய புரட்சிக்கவி' என்ற பாடலில் அரசன் மகளாகிய அமுதவல்லியும், குடிமகனான உதாரனனும் காதலித்து இணைகின்றனர் என்று அவர் காட்டுகின்றார். இக்காட்சி அக்காலத்தில் பெரும் புரட்சியாக இருந்தது. அவருக்கும் அப்பட்டத்தை ஈட்டிக் கொடுத்தது. இன்று நமது அரசு கலப்பு மணத்தை ஆதரித்துச் சட்டம் இயற்றியுள்ளது.