பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாக்டர் சி. பாலசுப் பிரமணியன் 267 மக்களும் கலப்பு மணத்தின் தேவையையும் பயனையும் உணர்ந்து போற்றத் தொடங்கி விட்டனர். புரட்சிக் கவிஞர் பாவேந்தரின் கனவு நனவாகத் தொடங்கி விட்டது. மறுமணம் பெண்களுக்கு இழைக்கப்படும் தலையாய கொடுமை, மறுமண மறுப்பு. இக் கொடுமை தொல்காப்பியனார் காலத்திற்கும் முன்பிருந்தே நடைபெற்று வந்திருக்கின்றது என்பது அவர் இதற்கு இலக்கணம் கூறி இருப்பதில் இருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. தொல்காப்பியனார் மனைவியை இழந்தபின் கணவன் வருந்துவதையும் கணவனை இழந்தபின் மனைவி வருந்து வதையும் காதலி இழந்த தபுதார நிலையும் காதலன் இழந்த தாபத நிலையும்: என்ற இலக்கணத்தால் குறிக்கின்றார். இத்துடன் நில்லாது பெண் மகள் உடன்கட்டை ஏறுதலை , கல்லோள் கணவனொடு கனியழல் புகீஇச் சொல்லிடை யிட்ட பாலை நிலையும்: என்று குறிக்கின்றார். ஆனால் ஆண்கள் உடன்கட்டை ஏறியதாகக் கூறவில்லை. எனவே இக்கொடுமை தொல் காப்பியனார் காலத்திற்கும் முன்பே நடைபெற்றிருக் கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. போரில் பட்ட வீரனுக்கு ஊர்ப்புறத்தே நடுகல் வைப்பது பண்டைய மரபு. அதில் அவனின் உருவத்தைப் பொறித்திருப்பர். இவ்வுருவத்தை அவன் மனைவி வழிபட்டு வருவாள். பலிக்கொடை கொடுத்து வழிபட்டு வருவாள். அவ்வாறு பலிக் கொடை கொடுக்கும் ஒரு பெண்ணைப் புறநானுாறு காட்டுகின்றது.