பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என்று அப்பெண்களின் நிலைக்கு இரங்கி இரத்தக்கண்ணிர் வடிக்கின்றார் பாவேந்தர். கணவனை இழந்த பின் அவளை யாரும் எதற்கும் அணுகுவதில்லை. அவள் உள்ளம் விரும்பும் சிறு ஆசையைக் கூட யாரும் நிறைவேற்றுவ தில்லை. மாண்டவன் மாண்டபின்னர்- அவனின் மனைவியின் உளத்தை ஆண்டையர் காண்பதில்லை-ஐயகோ அடிமைப் பெண்கதியே - பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 109. என்று கைம்மைப் பெண்களுக்காக மனவேதனை அடை கின்றார். அவ்வேதனை அறிவைத் தொட்டுச் சிந்தனை யைத் துரண்டுகின்றது. அவரது சிந்தனையில் இருந்து கிளம்பும் முதல் வினா இதுதான். வாடாத பூப்போன்ற மங்கை கல்லாள் மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ? பாடாத தேனீக்கள், உலவாத் தென்றல் பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ? - பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 82. இக் கேள்விக்கு விடையென்ன? விடை காண முயல்கின்றார் பாவேந்தர். இதுபோன்ற சிக்கல் வேறு எங்கு நடைபெறு கின்றது. அச்சிக்கலைத் தீர்க்க அங்கு எந்த வழி மேற் கொள்ளப்படுகின்றது. அதனைப் பின்பற்றி இச்சிக்கலுக்குத் தீர்வு காணலாம் என்ற முடிவுக்கு வருகின்றார் பாவேந்தர். அத்தகைய சிக்கல் ஆண் இனத்தில் இருப்பதை அறிகின்றார். அதற்கு அங்குச் சிக்கல் தீர்க்கும் வழி யாது? ஆடவரின் காதலுக்கும், பெண்கள் கூட்டம் அடைகின்ற காதலுக்கும் மாற்றமுண்டோ? பேடகன்ற அன்றிலைப்போல், மனைவி செத்தால் பெருங்கிழவன் காதல்செய்யப் பெண் கேட்கின்றான் - பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 82.