பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 271 நிலையே உள்ளது. அதனைப்போன்று கணவனை இழந்த பெண்ணும் வேறொரு ஆடவணை மணந்து கொண்டால் சிக்கல் தீர்ந்துவிடும் என்று எண்ணுகின்றார். அவ் வெண்ணத்தையே, துணைவி இறந்தபின் வேறு துணைவியைத் தேடுமோர் ஆடவன் போல்-பெண்ணும் துணைவன் இறந்தபின் வேறு துணை தேடச் சொல்லிடுவோம் புவிமேல் ட பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 107. என்று வெளியிடுகின்றார். கணவனை இழந்த பெண்கள் மறுமணம் புரிந்து கொள்ளுதல் வேண்டும். மறுமணம் புரிவது சிறுமை என்றறைவது குறுகிய மதியென அறிஞர்கள் மொழிகுவர். அதனால், காதல் சுரக்கின்ற நெஞ்சத்திலே-கெட்ட கைம்மையைத் துார்க்காதீர்-ஒரு கட்டழகன் திருத்தோளினைச் சேர்ந்திடச் சாத்திரம் பார்க்காதீர் ட பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 107. என்கின்றார். இவ்வாறு கைம்பெண்களின் நிலையையும், அது நீங்க வழியையும் கூறிய பாவேந்தர் இறுதியாக அவளை மணக்கப் போகும் ஆணிடம், கற்கண்டு போன்றபெண் கணவனை இழந்தால் கசந்தபெண் ஆவது விந்தைதான் புவிமேல் சொற்கண்டு மலைக்காதே உன் பகுத்தறிவால் தோஷம் குணம் அறிந்து நடப்பாய்-துயர் கடப்பாய் துணை பிடிப்பாய்-பயம் விடுப்பாய் - பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 193. என்று கூறுகின்றார்.