பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தொழிலாளர் புரட்சி

புரட்சி" என்ற சொல் புரட்டு என்ற சொல்லில் இருந்து உருவாகியது. புரட்டுதல் என்றால் ஒன்றை தலைகீழாகச் செய்தல் என்று பொருள். எனவே புரட்சி என்பதற்கு ஒன்றைத் தலைகீழாக மாற்றுவது என்று பொருள்.

சீர்திருத்தத்திற்கும் புரட்சிக்கும் சிறிது வேறுபாடு உண்டு. சீர்திருத்தம் என்பது ஒன்றில் உள்ள குறைகளை நீக்கி அதனைப் பயன்படுத்திக் கொள்வது. புரட்சி என்பது ஒன்றினைத் துரக்கி எறிந்துவிட்டு வேறொன்றை அங்கு வைப்பது. அரசாங்கத்தில் குறைகள் இருந்தால் அக்குறை களை நீக்குதல் சீர்திருத்தம். அவ்வரசாங்க முறையையே துரக்கி எறிந்துவிட்டு வேறொரு ஆட்சிமுறையை மேற். கொள்வது புரட்சி. இப்புரட்சியினைத் தொழிலாளர்களே செய்தல் வேண்டும். எத்தனை காலத்திற்குத்தான் அவர்கள் பொறுமையுடன் இருப்பர். ஆள்பவர் சிற்சிலர்; ஆட்பட்டிருப்பவர் பல்லோர்-எனில் அல்லல் அடைபவர் அப்படியே என்றும் கில்லார். -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி, 2, ப. 33. அதனால் அவர்களுக்கும் சம உரிமை கொடுத்து நன் முறையில் வாழ வழிகோல வேண்டும். ஆனால் இங்கு. யாரும் அதனைச் செய்வதாய் இல்லை. அவர்கள் செயலால், வெகுண்டெழுந்த பாவேந்தர், சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்தவற்றைச் சொத்தையெல்லாம் தமக்கென்று சொல்வார் தம்மை வெருட்டுவது பகுத்தறிவே! இல்லை யாயின் விடுதலையும் கெடுதலையும் ஒன்றே யாகும் - பாரதிதாசன், பாண்டியன் பரிசு, ப. 99. என்கின்றார். நாடு விடுதலை பெற்றுவிட்டது. அயலான் ஆங்கிலேயனிடமிருந்து நாம் விடுதலை அடைந்து,