பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 281 விட்டோம். ஆனால் இத்தகைய ஆண்டான்களிடமிருந்து நாம் இன்னும் விடுதலை அடையவில்லை. இத்தகைய கொடியோரிடமிருந்து நமக்கு விடுதலை கிடைக்காத வரையில் ஆங்கிலேயரிடம் இருந்து கிடைத்த விடுதலையும் ஒன்றுதான்; கேடும் ஒன்றுதான். விடுதலை கிடைத்தும் பயன் ஏதும் இல்லை. புளிக்காத சோறும், கிழியாத ஆடையும், ஒழுகாத வீடும் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் என்று கிடைக்கின்றதோ அன்றே நாம் பெற்ற சுதந்திரத்தின் முழுப்பயனையும் அடைந்தவர்கள் ஆவோம்" என்று ஒருமுறை காமராஜர் அவர்கள் கூறினார். அந்நிலையை எய்த முடியாத அளவிற்கு ஆளும் வர்க்கம் - முதலாளி வர்க்கம் தொழிலாளர்களுக்கு இன்னல் கொடுத்துக் கொண்டே வருகின்றது. இதனால் வெறுப்புற்ற பாவேந்தர் கொதித்தெழுந்து தொழிலாளர்களிடம் கூறுகின்றார். கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே குகைவாழ் ஒரு புலியே உயிர் குணமேவிய தமிழா! -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 173. புறப்படு, கொலைவாளை எடுத்துக் கொண்டு புறப்படு. கட்டா தென்று கதறுகின்ற தொழிலாளர்க் கெலாம் வழிசெய வேண்டும். -பாரதிதாசன், குறிஞ்சித்திட்டு, ப. 8. புறப்படு உங்கள் உழைப்பை உறிஞ்சி உயிர்வாழும் அட்டைகளை ஒழிக்கவேண்டும். சடுகுடு என்றே நெய்வீர் கந்தையில்லை தார்வேந்தன் கட்டுவது சரிகைவேட்டி கடல் நடுவில் முத்தெடுப்பீர் கஞ்சி இல்லை கடனறியா வேந்தனுக்கு முத்துத் தொங்கல் шт—18