பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 291, தேசியச் சின்னமாக அசோகச் சக்கரம் விளங்குகின்றது. மேலும் தேசியப் பூ, தேசியப் பறவை, தேசிய விலங்கு என்று ஒவ்வொரு நாட்டிற்கும் உண்டு. இவை மட்டு மல்லாது பாரத நாட்டிற்கு அமைந்த வேறொரு சின்னம் உண்டு. அது, = பஞ்சமர் பார்ப்பனர் என்பதெல்லாம் என்ன? பாரதநாட்டுப் பழிச்சின்னத்தின் பெயர் தோழா -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 163. என்று, சாதி என்பது பாரத நாட்டின் பழிச்சின்னமாக விளங்குகின்றது என்கின்றார். அப்பழியை நீக்குவது நமது கடமையல்லவா? ஆனால் இன்று நாம் அப்பழிச்சின்னத்தை அழிக்க முனையாமல் போற்றிக் கொண்டல்லவா இருக் கின்றோம். இவ்வுலகத்தின் இன்றைய நிலை என்ன? சாதியால் சண்டைகள் மலிந்து கிடக்கின்றன. இதனை எண்ணியே பாவேந்தர், இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின் றானே! மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே வாயடியும் கையடியும் மறைவதெந்நாள்? -பாரதிதாசன், பாண்டியன் பரிசு, ப. 99. என்று கேட்கின்றார். சாதியால் வரும் கேடு கொஞ்சமா? சாதியின் பெயரால் எத்தனை காதல் உள்ளங்கள் பிரிக்கப் படுகின்றன. எத்தனை உள்ளங்கள் மேல் சாதியை நோக்கி ஏங்கித் த விக்கின்றன. எத்தனை இள உள்ள ங் களில் கொந்தளிப்புப் பொங்கிப் பொங்கி அடங்குகின்றது. இத்தகைய கேடுகள் இல்லாமல் சாதி இருப்பதால் என்ன பயன்? மேலும், சாதியால் சமயங்களால் அறிவு தழைக்காது தமிழ் நூலில் மடமையே இருக்காது -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 4, ப. 145.