பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் இராத தொன்றில்லை திராவிட நாட்டில் இந்த நிலையில் வந்தான் அகத்தியன் செல்வம் முற்பிறப்பிற் செய்தில்ே வினைப்பயன் என்று புதுக்கரடி ஒன்றை ஏவினான் 'ஆன்மா என்றும் அழியா தென்று மற்றொரு புதுக்கரடி தெற்றென விட்டான். டபாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 110. இவ்வாறு மக்களை ஏய்த்து அவர்களிடம் பொய்கூறி LDL - GRI) LD GRI) ILI உண்டாக்கினர். இவர்களின் வேலை தமிழர்களைப் பின்னுக்குத் தள்ளுவதே. இதனைத் தமிழன் நன்கு உணர்தல் வேண்டும் எனப் பாவேந்தர் வலியுறுத்று கிறார்.

இப்பார்ப்பனரும் செங்கோல் ஏந்தும் பிறரும்' மக்களைச் சார்ந்து மக்களோடு மக்களாக ஒன்றாதல் வேண்டும்.

... ... பார்ப்பனரும், கையில் செங்கோல் ஏந்தும் பிறரும் மக்களைச் சார்ந்தாரே பெருவாழ்வுக்கு இவையெல்லாம் அடிப்படைத் திட்டங்கள். -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 87. சாதி சமயம் ஒழிந்து நல்வாழ்வு ஏற்பட வேண்டுமானால் அந்தணரும் ஆள்வோரும் மக்களோடு மக்களாய்ச் சேர்ந்து ஒன்றாதல் வேண்டும். வணி கரையும் வேளாளரையும் விட அந்தணரும், ஆள்வோரும் பிறப்பால் உயர்ந்தவர் என்ற எண்ணம் மிகுதியாக இருந்ததால் இவ்விருவரை மட்டும் குறிக்கின்றார்.