பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எவ்வளவு புனிதமான நாள். இந்நாளில் கெட்ட சகுனம் போல் அங்கு வடமொழி எதற்கு? அந்த அபசகுனத்தைத் தூக்கி வெளியில் எறி. இன்பம் பொங்கும்; மணநாள் சிறப்படையும். வாழ்நாள் அந்நாளை அடைய நாம் சாதிமத பேதங்களை மறந்து ஒன்றுபட வேண்டும். ஒன்று பட மறுக்கும் மக்களை ஒன்றுபடுத்தல் வேண்டும். பன்மதம் சேர்ந்த பலகோடி மக்களும் நாங்கள் ஒன்றுபட்டோம் என்று நவின்றார் மதங்களின் தலைவர் விரைந்து வந்து பிரிங் திருங்கள் என்றா பிதற்றுவார்? அவர்கள் அருள் உள்ளம் கொண்டவர் அல்லவோ? என்று, மக்கள் அனைவரும் ஒன்றுபடுதலை மென்மையாக எடுத்துக் கூறுகின்றார். ஒன்றுபட மக்கள் மறுத்தார் பாவேந்தரின் உள்ளத்திலிருந்து புரட்சி பீரிட்டெழுகின்றது. சாதிமத பேதங்கள் மூட வழக்கங்கள் தாங்கிநடை பெற்றுவரும் சண்டை உலகிதனை ஊதையினில் துரும்புபோல் அலக்கழிப்போம்; பின்னர் ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்! பேதமிலா அறிவுடைய அல்வுலகத் திற்குப் பேசு சுயமரியாதை உலகெனப் பேர் வைப்போம் ஈதே காண், சமூகமே யாம் சொன்னவழியில் ஏறு,ே ஏறு,ே ஏறு,ே ஏறே! -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 146. இப்பாட்டில் பாவேந்தரின் சாதிமத பேதம் பற்றிய அவரின் கொள்கையை முழுமையாகக் காணமுடிகின்றது. கடவுள் மறுப்யு மிகப் பழங்காலத்திலிருந்தே இறைவழிபாடு உலகெங் இலும் இருந்து வருகின்றது. கி.மு. 10ஆம் நூற்றாண்