பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"300 புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபிற் பெரும்படை வாழ்த்தலென்று இருமூன்று மரபிற் கல்லொடு புணர' என்று வரும் தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம். இப்பழக்கம் சங்ககாலத்தில் மிகுதியாக இருந்தது. அதியமான் நெடுமான் அஞ்சி போரில் வேல்பாய்ந்து பட்டான். அ வ னு க் கு நடுகல் எடுக்கப்பட்டதை ஒளவையார், இல்லா கியரோ காலை மாலை அல்லா கியர்யான் வாழு நாளே நடுகற் பீலி சூட்டி நார்அரி சிறு கலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ கோடுயர் பிறங்குமலை கெழீஇய நாடுடன் கொடுப்பவும் கொள்ளா தோனே? -புறநானூறு, பாடல் 243. என்ற புறப்பாட்டின் மூலம் கூறுகின்றார். போரில் இறந்துபட்டவர்களுக்கு மட்டுமின்றி, பிற துறைகளிலும் வீரம் விளைத்து இறந்துபட்ட வீரர்களுக்கும் நடுகல் எடுப்பது மரபு. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து இறந்தான். அவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டது என்று புறநானூறு கூறுகின்றது'." இவ்வாறு பண்டைக்காலத்து மனிதனையும் வழிபட்டனர். தீயை வழிபட்ட மனிதன் அதற்கு உருவம் கொடுத்து வணங்கத் தொடங்கும்போது தீயில் உள்ள செம்மை’ நீேலம்" என்ற இரண்டனையும் மனித உருவில் வடிக்க எண்ணினான். உடலில் பிங்கல நாடி உடலின் வலப் புறத்திலும், இடகலை நாடி உடலின் இடப் புறத்திலும் ஓடுகின்றது. பிங்கல நாடி ஆணுக்கும், இடகலை நாடி பெண்ணுக்கும் உரியது. இவ்விரண்டையும் ஒன்று சேர்த்து உருவம் சமைக்கும்போது வலப்புறம் செம்மையான ஆண் உருவத்தையும் இடப்புறம் நீலமான பெண் உருவத்தையும்