பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கோயிலில் வைத்துக் காக்கப்பட்டன. கோயில் பொருட் களைக் களவாடுதலைப் பெரிய பாவமாகக் கருதினர். *சிவன் சொத்துக் குல நாசம்' என்பது பழமொழி. ஊர்ப் பஞ்சாயத்து கோயிலில்தான் நடைபெற்றது. வறுமைக் காலத்தில் ஊர் மக்கட்குக் கோயிலே தஞ்சம் கொடுத்துக் காத்து வந்தது. இதனால் மக்கள் தங்கள் ஊரைக் காப்பதினும் கோயிலைக் காப்பதிலே பெரும் கவனம் செலுத்தினர். இத்தகைய சிறப்புப் பெற்ற கோயில்கள் சில புல்லர்களின் வருகையால் சிறப்பிழந்து போயின. இத்தகைய நிலையில் கோயிலைப் போற்றி வணங்குதல் என்பது ஏது ஏன்? கோயில், திருப்பணிச் செயல்களைச் சாடியே பாவேந்தர், சுயமரியாதை கொள் தோழா!-ே துயர் கெடுப்பாய் வாழ்வில் உயர்வடைவாய் உயர்வென்று பார்ப்பனன் சொன்னால்-ே உலகினில் மக்களெலாம் சமம் என்பாய் காசைப் பிடுங்குதற்கே-பலர் கடவுளென்பார் - இரு காதையும் மூடு! கூசி நடுங்கிடு தம்பி-கெட்ட கோயிலென்றால் ஒரு காதத் தில் ஒடு கோயில் திருப்பணி என்பார்-அந்தக் கோவில் விழாவென்று சொல்லியுன் வீட்டு வாயில் வந்துன்னைக் காசு-கேட்கும் வஞ்ச மூடரை மனிதர் என்னாதே! ட பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 139. என்கின்றார். பாவேந்தரின் கடவுள் மறுப்புக் கொள்கைக்குக் காரணம் கடவுள் பெயரால் சாதி மதங்கள் இந்நாட்டில் போற்றப்படுகின்றன. சாதி மதங்களால் மக்கள் பிளவுண்டு ஒற்றுமை ஏற்பட வழியின்றி அல்லல் உறுகின்றனர். இவர்கள் ஒன்றுபட்டு அல்லலில் இருந்து மீள வேண்டு