பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என்றதோர் தமிழரின் சொல்லை மறந்ததால் அல்லவா வந்ததித் தொல்லை? -பாரதிதாசன், தேனருவி, ப. 24. உருவ வழிபாடே மதத்தைத் தோற்றுவித்தது. மதம் மக்களிடையே பிளவை ஏற்படுத்திச் சண்டைகளைத் தோற்றுவித்தது. எனவே, க ட வு ைள ஒழிக்காமல் கடவுளின் உருவத்தை ஒழித்துவிட்டால் மதம் ஒழிந்து விடும், மதத்தின் பெயரால் நடக்கும் சண்டைகளும் ஒழிந்துவிடும். ஒருகடவுள் உண்டென்போம்! உருவணக்கம் ஒப்போம் உள்ளபல சண்டையெல்லாம் ஒழியும் மதம் ஒழிந்தால் திருக்கோயில் தொழிற்சாலை -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப, 87. என்கின்றார். மேலும் கடவுள் பற்றிய கட்டுக்கதைகளும் அவற்றை நம்பும் மூடப் பழக்கமும் தொலைதல் வேண்டும். ஓர் கடவுள் உண்டு - தம்பி உண்மை கண்ட நாட்டில் பேரும் அதற்கில்லை - தம்பி பெண்டும் அதற்கில்லை தேரும் அதற்கில்லை - தம்பி சேயும் அதற்கில்லை ஆரும் அதன் மக்கள் - அது அத்துணைக்கும் வித்து! உள்ளதொரு தெய்வம் - அதற்கு உருவமில்லை தம்பி! அள்ளி வைத்த ஆப்பி - தம்பி அதிற் கடவுள் இல்லை குள்ளமில்லை தெய்வம் - அது கோயில்களில் இல்லை. -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 151.