பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர் கூட்டும் படை கண்டு அஞ்சாமல் எதிர்த்து மானுடத்தைப் போற்ற வகை செய்ய வேண்டும். அதுவே மக்கள் அனைவருக்கும் இனிமை பயக்கும். இதனைப் -பகுத்தறிவால் உடனே செய்து முடிக்க வேண்டும். வெற்றி உறுதி என்று புரட்சி வேகத்தில் ஆர்ப்பரிக்கின்றார். மானிடம் என்றொரு வாளும் - அதை வசத்தில் அடைந்திட்ட உன் இரு தோளும் வானும் வசப்பட வைக்கும் - இதில் வைத்திடும் நம்பிக்கை வாழ்வைப் பெருக்கும் மானிடம் போற்ற மறுக்கும் - ஒரு மானிடம் தன்னைத்தன் உயிரும் வெறுக்கும் மானிடம் என்பது குன்று - தனில் வாய்ந்த சமத்துவ உச்சியில் கின்று மானிடருக்கு இனிதாக - இங்கு வாய்த்த பகுத்தறிவாம் விழியாலே வான் திசை எங்கணும் நீ பார் - வாழ்வின் வல்லமை மானிடத் தன்மை' என்றதேர் டபாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 145. என்று மானுடத்தைப் போற்றுவதன் தேவையையும் பயனையும் கூறுகின்றார்.