பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

நெடுந் தொலையில் உள்ளதாம். சத்தும் ஒளியும் சாகாமையும். அங்கே தான் நிலைகொண்டுள்ளன என்று நாங்கள் கேள்வி மூலம் அறிந்துள்ளோம். இது பொய்யாக இராது' என்றன ரஜசும் தமசும்.

விளியற்றவனைப் பார்த்துக் கழி எத்கையதென வினவின் தொடுமுனர்வின் துணையால் அவன் சரியான விடை அளிக்கவும் முடியும் ஆனால், கிளி எத்தகையதென வினவின் கீழும் மேலும் பார்ப்பான்; பேந்தப் பேந்த விழிப்பான்: அன்றேல் தனக்குத் தெரிந்ததை உளறிக் கொட்டுவானன்றே?

உடன் பிறந்த பாசம் சாத்விகத்தைப் பின்னும் பேசுமாறு செய்தது.

'பிரம்ம மேதய , மது மேதய: பிரம்மமேவ மதுமேதய பிரம்மம் புத்தியின் தாரணைச் சக்தியால் அடையப் படுகிறது. ஆனந்தம் புத்தியின் தாரணைச் சக்தியால் அடையப்படுகிறது'. பிரம்மமே ஆகிய ஆனந்தம் புத்தியின் தாரணைச் சக்தியால் அடையப்படுகிறது' என்கிறது உபநிசத்து.

காமம், வெகுளி, மயக்கம் இம்மூன்றும் தம்முடைய உட்பகைகள். உள்ளத்தை மாசு படுத்தி நம் வாழ்வைப் பாழ் படுத்திவைப்பவைகள் இம்மூன்றும்தான். அனுபவ அறிவாதிய உண்மையே இந்த உட்பகைக்குச் சரியான மருந்து. எனவே நம் உள்ளம் தூய்மையாயின் அங்கே உண்மை ஒளி விசும்.

இந்த உண்மையை வேண்டித் தொழுது பிற ஒன்றின் பால் அல்லது பிறர் ஒருவரிடமிருந்து கடைச்சரக்குப் போலப் பெற்றுக் கொள்வதும் அன்று. எந்த ஒரு மனிதனுக்கும் சொந்தமானதும் அன்று. இதற்கு உருவமும் நிறமும் கிடையாது. பெறற்கரிய பேறு அறிந்து அடையும் ஆனந்தம்! மனிதனை மகானாக்கக் கூடிய இந்த உண்மையை எந்தக்குருவும் எந்த அடிகளாரும் எந்த ஒரு மனிதனுக்கும் கொடுக்கவும் வாங்கவும் இயலாத ஒன்று.