பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

‘பனி'யென, 'வெயிகாற் றின்பாற்
படுமழை, யிடி, மின், - னெல்லாம்
துனி'யென மனிதன் தூற்றத்
தொடங்குவான், துனியென் னாதே
'கனியென, மலர்,கா யென்னக்
காலங்கண் டளித்துக் காக்கும்
இனியன தருக்க ளே'யென்
றிசைத்தது, தேன்சிட் டொன்றே!

'கருமியாய்க் காக்கும் காசே
கண்'ணென எண்ணு வோன், கண்
ணொருமையா யுறங்குங் காலுற்
றுளங்கொண்ட கனவஃ தொன்று:
தருமியாய்த் தயவு கூர்ந்து
தளர்ந்தாரைத் தாங்கி னான்போல்.
பெருமையா யிருந்தும், பேசப்
பேச்சற்றா' னென நான் நின்றேன்.

ஆட்டுக்குத் தீனி வேண்டின்,
'அறுத்துக்கொள்' ளென்னும்; அங்கே
காட்டுக்கு வேலி வேண்டின்,
'கடிந்துகொள்' ளென்னும்; காக்கும்
வீட்டுக்கு விறகு வேண்டின்,
'வெட்டிக்கொள்' ளென்னும்; வீய்ந்த
பாட்டிக்குக் கட்டை வேண்டின்,
‘படுத்திக்கொள்' ளெனுமிச் சோலை.

காத்து நான் கண்டு கொண்ட
கருத்தையே தானுங் கொண்டிங்
கேத்தியே குருவி, யென்னை
யிறக்கிற்றென் றேங்கி நிற்கக்
கூத்தெதிர் பார்த்தோ ரொப்பக்
கூடி நின் றோர்க்குள் நின்று,
கோத்திணைத் திலங்கும் பூப்போல்
குறு நகை கொண்ட நண்பன்,